xxxiv
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
காட்டு:
மயிலாடுதுறை
மாயவரம்,மாயூரம்
பழமலை,முதுகுன்றம்
விருத்தாசலம்
பெருவுடையயார்
பிரகதீஸ்வரர்
பிறவிமருந்திறைவர்
பவஒளஷதீஸ்வரர்
புற்றிடங்கொண்டார்
வன்மீகநாதர்
கூடுதுறையார்
சங்கமேஸ்வரர்
மாதொருபாகன்
அர்த்தநாரீஸ்வரர்
இந்தப் பணி இன்னும் தொடர்பின்றது. எழில்மிகு
சென்னை சிங்காரச் சென்னை என்று மாறியுள்ளது.
ஊர், ஊரவை, ஊராட்சி, ஊராட்சிமன்றம், ஊராட்சி
ஒன்றியம் என்னும் தனித்தமிழ்ப்
பெயர்களிருக்கக் கிராம சபை என்று தமிழினத்
தலைவர் என்றும், தமிழை வளர்ப்போர் என்றும்
பறைசாற்றுபவர்களாலேயே பரப்பப்பட்டு வருகிறது.
எல்லாரும் இப்படியா? விதிவிலக்காகச் சிலர்
இருந்தனர். அவருள் சிலர் சங்க காலத்திலும்
இருந்தனர். சென்னைக் கிறித்தவக் கல்லூரிப்
பேராசிரியர் வி.கோ.பரிதிமாற்கலைஞர்,
வரலாற்றுப் பேராசிரியர்கள்
பி.தி.சீனிவாசையங்கார்,
வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், தமிழ்த்
தாத்தா உ.வே.சாமிநாதையர் முதலானோர்.
தனித்தமிழுக்கு வித்திட்டவர்
வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி. தம் பெயரைப்
பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்.
அவரிடத்தில் வந்த சுவாமி வேதாசலம் பரிதிமாற்
கலைஞர் ஊன்றிய வித்துக்கு நீரூற்றி
வளர்த்தார்.
"பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறுந்
தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய
உடல்மறந் தாலும்"