தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பதிப்பாளர் குறிப்பு


iii

பதிப்புரை

ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை
     எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை
பாடு பட்ட பதத்தெளி வெத்தனை
     பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை
நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு
     நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை
கூட நோக்கினர்க் காற்றின வெத்தனை
     கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!

- இரா.இராகவையங்கார்

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது.

இந்நூலைக் கற்றால் ‘பெருக்கத்து வேண்டும் பணிதல்’ என்ற
இலக்கணத்துக்கு இதுதான் சரியான இலக்கியம் என்ற உண்மை தெளிவாகும்.

பேதங்களுக்கு அப்பாற்பட்ட போதம்தான் தமிழ்ஞானம் என்பது
இந்நூலின் தொகுமொத்தப் பொருள் என்றால் அது மிகையாகாது.

’நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்ற தொடரை விளக்குவதற்காக
இவர் மண்ணுலகில் பிறந்தார் என்று கொள்ள வேண்டி இருக்கிறது.

டாக்டர் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரமும் மகாத்மா காந்திஜி
அவர்களின் சத்திய சோதனையும் ஒரேதரம் உடையவை. இவற்றின்
ஒவ்வோரெழுத்தும் வாய்மை நிரம்பிய வைர எழுத்துக்கள்.

என்சரித்திரம் கற்றால் தமிழார்வம் வரும். வந்த தமிழார்வம் வளரும்.

பத்துப்பாட்டும், எட்டுத்தொகையுள் ஐந்தும், மூன்று பெரும்
காப்பியங்களும், ஐம்பதிற்கும் மேற்பட்ட பிற இலக்கியங்களும், இலக்கண
நூல்களும் நின்று நிலவுவதற்குக் காரணம், டாக்டர் உ.வே.சா. அவர்களின்
அயரா உழைப்பே என்பதை, இந்த மன்பதை அறியும். அந்த நூல்களைக்
கற்கும் முன், ’என் சரித்திரம்’ என்னும் இந்த நூலைக் கற்க வேண்டும்.
இதனைக் கற்றால் தமிழ் நூல்களை அச்சுக்குக் கொண்டுவர அவர்பட்ட
இன்னல்கள் புரியும்.

’என் சரித்திரம்’ டாக்டர் உ.வே.சா. அவர்களின் 150ஆவது ஆண்டில்
ஆறாம் பதிப்பாக வெளிவரத் திருவருட் சக்தி அருள்பாலித்திருக்கிறது.


புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:36:12(இந்திய நேரம்)