Primary tabs
தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்களின்
பதிப்புப் பணி அதே
பாணியில் இந்நூல் நிலையம் வாயிலாக, டாக்டர்
உ.வே.சா. அவர்களின்
திருமகனார் திரு. சா. கல்யாண சுந்தரம் ஐயர்
அவர்களாலும், டாக்டர்
உ.வே.சா.அவர்களின் பெயரனார் திரு.க.சுப்பிரமணிய
ஐயர் அவர்களாலும்
கொள்ளுப் பெயரனார் திரு.சு.வேங்கடகிருஷ்ணன்
அவர்களாலும் தொடர்வது
மிக்க மகிழ்ச்சிக்குரியதாகும்.
அச்சில் வெளிவராத தமிழ்நூல்கள் இன்னமும்
இருக்கின்றன. ஓலையில்
இருக்கும் அவற்றை அச்சுத் தமிழ்ச் சோலையில் உலாவரச்
செய்ய முயலும்
தமிழ்த் தொண்டர்களை மேலும் உருவாக்க இந்நூல் உதவ
வேண்டும் என
எல்லாம் வல்ல திருவருட் சக்தியை இறைஞ்சுகிறேன்.
இன்பவகை நிமித்தம் துய்க்கும்
கதி அறியோம் என்றுமனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதி அறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே
டாக்டர் உ.வே.சா.
நூல்நிலையம்
சென்னை -90
காப்பாட்சியர்