சென்னை கவர்னர் லார்டு கார்மிகேல் பிரபுவோடு
சம்பாஷித்துப்
பாராட்டப் பெற்றது.
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணப் பதிப்பு
நிறைவேறியது.
1909
சென்னையில் வீடு வாங்கி “தியாகராச விலாசம்” என்று
பெயரிட்டது.
12-12-1911
ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழாவினையொட்டி ரூ. 100/-
காரனேஷன்
பென்ஷன் ஆண்டுக் கொருமுறை வழங்கப் பெற்றது.
24-1-1912
கவர்னர் துரை தமிழ் வகுப்பிற்கு வந்து 1 மணி நேரம்
இருந்தது.
தமிழ்ச் சுவடிகளைக் காட்டி வாழ்த்துப்பா அளித்தது.
1916
மைசூர் யூனிவர்ஸிடியில் திராவிடியன் போர்டில் மெம்பராக
நியமனம்.
31-1-1917
காசி பாரத தர்ம மகாமண்டலத்தாரால் ‘திராவிட வித்யா
பூஷணம்’
பட்டம் பெற்றது.
1-3-1917
காசி சர்வகலாசாலையில் போர்டு மெம்பர் பரீக்ஷகர் நியமனம்.
8-5-1917
மனைவியார் வியோகம்.
1-4-1919
வேலையிலிருந்து ஓய்வு பெற்றது. (39 வருட உழைப்புக்குப்
பின்).
டாக்டர் ரவீந்திரநாத தாகூர் வீட்டிற்கு வந்து அளவளாவியது.
13-1-1922
மேன்மைதங்கிய வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்தபோது
‘கில்லத்து’ப் பெற்றது.
12-2-1924
பெருங்கதை பதிப்புப் பூர்த்தி
1924-27
சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் கல்லூரிப் பிரின்ஸ்பாலாகப் பதவி
ஏற்றுப் பல நன்மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லியது.
1925
காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய
ஸ்வாமிகள்
அவர்களால் ‘தாஷிணாத்ய கலாநிதி’ என்ற பட்டம் சூட்டப்
பெற்றது.
1927
சென்னை,சர்வகலாசாலையின் ஆதரவில் ‘சங்க காலத்தமிழும்
பிற்காலத்
தமிழும்’ என்ற தலைப்பில் 10 தினங்கள் சொற்பொழிவு ஆற்றியது.
21-3-1932
சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் ‘டாக்டர்’ பட்டம்
அளிக்கப்
பெற்றது.
1932
தமிழன்பர் மகாநாட்டு வரவேற்புத் தலைவராக இருந்தது.