4-3-1933
ஆந்திர யூனிவர்ஸிடி தமிழ் போர்டில் மெம்பர் ஸ்தானத்தை
ஒப்புக்
கொண்டது.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை
எழுதி
வெளியிட்டது.
1935
எண்பதாவது ஆண்டு நிறைவு விழா நாடு முழுவதும்
கொண்டாடப்
பெற்றமை.
1937
குறுந்தொகைப் பதிப்பு.
16-1-1937
குடந்தை,கோபாலராவ் நூல் நிலையத்தில் ஐயரவர்கள் படத் திறப்பு
6-2-1937
சநாதன தர்ம மகா நாட்டில் கலந்து கொண்டது.
27-3-1937
பாரதீய ஸாஹித்ய பரீஷத்-மகாத்மா காந்தி தலைமை
வரவேற்புரை
நிகழ்த்தியது. மகாத்மா காந்தியுடன் உரையாடல்.
11-1-1938
சென்னையில் வைஸ்ராய் நடத்திய விருந்தில் கலந்து கொண்டது.
15-3-1938
ஆக்ஸ்போர்டு ஸம்ஸ்கிருத ஆசிரியர் பிரசங்கத்திற்குச்
சென்றது.
மணிமேகலையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள்.
1-8-1939
கொப்பனாப்பட்டிக் கல்லூரித் திறப்பு விழாவில் முன்னுரை
25-11-1939
செவ்வைச்சூடுவார் பாகவதம் குறிப்புரை எழுத ஆரம்பித்தது.
28-11-1939
டி. கே. ஸி. அவர்களும்,கல்கி அவர்களும் வீட்டிற்கு
வந்து
உறவாடினர்.
7-12-1939
ஹிந்து பத்திரிகை வைரவிழா வாழ்த்து
15-12-1939
கல்கி அவர்களிடம் ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளியிட
‘சுய
சரிதம்’ முதல் அத்தியாயம் எழுதிக் கொடுத்தது.
12-6-1940
கூத்தனூர் கலைமகள் விஷயமாகப் பாடல்கள் எழுதி அனுப்பினமை
5-8-1941
தமிழிசையைப் பற்றி டைகர் வரதாசாரியாருக்கு
அபிப்பிராயத்தை
எழுதியனுப்பியது.
29-9-1941
திருச்சி ரேடியோவில் ‘எதுதமிழ்’ என்பது பற்றி ஒரு பேச்சு.
7-12-1941
கனகாபிஷேகம்-கொள்ளுப் பேரனால்
13-1-1942
இரவு மெத்தைப் படியில் தவறி விழுந்தது.
29-1-1942
டாக்டர் திருமூர்த்தி அவர்கள் வந்து பார்த்து,அவரது
ஆலோசனையின்
படி சிவராம கிருஷ்ணையரைக் கொண்டு நிழற்படம் எடுக்கப்பட்டது.