தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Varalatrukalangium



அண்ணாமலைப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர்
டாக்டர் பி. வி. வைத்தியநாதன் B.E.,M.Tech.,Ph.D.(U.K.)
Dip. in French & German, M . I . S . T . E.,

அவர்கள் வழங்கிய

அணிந்துரை

தில்லையின் எல்லைக்கண், செட்டிநாட்டுப் பெருங்கொடை வள்ளல் அண்ணாமலை அரசர் அவர்களின் தொலைநோக்குத் திட்டத்தால் உருவாக்கப் பெற்று, நீண்ட நெடிய வரலாறு பெற்றுள்ள இவ் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை, கம்பராமாயணச் செம்பதிப்பினையும் திருவருட்பாத் தொகுதிகளையும் திருமுறை இலக்கிய வரலாற்றினையும் வெளியிட்டுச் சிறப்புப் பெற்றுள்ளது போலத் ‘தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம்’ என்ற தொகுதிகளையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கி, மேலும் சிறப்புப் பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

முன்னைய மூன்று தொகுதிகளை அடியொற்றி இந்நான்காம் தொகுதியும் சங்ககாலம் முதல் இக்காலம் வரை வாழ்ந்த 1200 புலவர்களின் வரலாறுகளை நிரல்படுத்தித் தந்துள்ளது. அடக்கமுடைய தமிழ்ப் புலவர்களின் வரலாறுகளை நாட்டு மக்கள் நன்குணர இத் தொகுதிகள் பெரும் வாய்ப்பாக அமையும். ‘தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை’ என்ற பொன்மொழியை இத்தொகுதிகள் மெய்ப்பிக்கின்றன என்பதில் எத்துணையும் ஐயமில்லை.

தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியத் திட்டப் பணியில் தொடக்க முதல் பங்கேற்று, கண்ணும் கருத்துமாக வரலாறுகளைத் தொகுத்தும் வகுத்தும் சுவைபட விளக்கியும் அளித்துள்ள தமிழியல் துறைச் சிறப்புநிலைப் பேராசிரியர் டாக்டர் வெ. பழநியப்பன் அவர்களின் அரிய பணி போற்றுதலுக்கும் பாராட்டுதற்கும் உரியது. ஒருவரின் தனித்த வரலாற்றினும் அவர்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:29:27(இந்திய நேரம்)