தமிழரின் தோற்றம்
முதல் சங்ககாலம் வரையிலுள்ள
வரலாற்றினை இந்நூல்கூறுகின்றது.
இதுகாறும் தமிழ்மொழியில் வெளிவராதனவும்,
எம்முடைய மற்றைய வரலாற்று நூல்களிற்
காணப்படாதனவுமாகிய பல பொருள்கள்
இதனகத்தே வெளிவந்துள்ளன. அவைகளை
விளக்குதற்கு ஏற்ற மேற்கோள்களை
இடையிடையே எடுத்துக் காட்டியுள்ளேம்.
அண்மையில் வெளிவர விருக்கும் "தமிழர்
வரலாற்று வாயில்கள்" (Sources
for history of the Tamils) என்னும் எமது நூல்
இந்நூலுக்கு, மேலும் விளக்கம் அளிப்பது
ஆகும்.