Primary tabs
டாற்றி யிருக்கின்றனர்.தமிழையே வீட்டு மொழியாகவும் நாட்டு மொழியாகவும்
கொண்ட பூர்வகுடித் தமிழ்ப்புலவர்கள் மட்டுமன்றி, வேற்று மொழியை வீட்டு
மொழியாகக் கொண்ட அண்ணாமலை ரெட்டியார் போன்ற புலவர் பெரு
மக்களும் , மொழியால் மட்டுமன்றி, பிறந்த நாட்டாலும் தமிழ் மண்ணுக்கு
அயலவரான பெஸ்கி ( வீரமாமுனி ) , ஜி.யு.போப், கால்டுவெல் ஆகியோரும்
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அரும்பணி யாற்றியுள்ளனர். அவர்களெல்லாம்
இன்றுள்ள அரசியல் கட்சிகளிலே எந்த ஒரு கட்சியையும் சார்ந்தவர்கள்
அல்லர். சொல்லப்போனால் , அவர்கள் எல்லாம் இன்றுள்ள அரசியல்
கட்சிகளைச் சார்ந்த அத்தனைபேருக்கும் சொந்தக்காரர்கள். இந்த அடக்க
உணர்வோடும் சத்திய நெறியோடும் தமிழ்மொழி வளர்ந்த வரலாற்றை
ஆராய்வோமானால், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நம்முடைய முன்னோர்
கள் ஆற்றியுள்ள தொண்டுக்கு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாகிய
நாம் இன்று ஆற்றி வரும் தொண்டு உறை போடவும் காணாதென்பதனை
உணர்ந்து கொள்வோம்.
இந்த நூலிலே இன்றுள்ள எந்த ஒரு அரசியல் கட்சியிடமும் விருப்பு
வெறுப்புக் காட்டாமல் , விடுதலைப் போராட்ட காலத்திலே தமிழுக்குத்
தொண்டு செய்த சான்றோர் - அவர் இன்று எந்தக் கட்சியைச் சார்ந்த
வராயினும்-அனைவரையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளேன்.
தமிழ் வளர்ச்சித் தொண்டு காங்கிரஸ் மகாசபை தோன்றுவதற்கு
முன்னேயும் நிகழ்ந்தது என்பதனை எடுத்துக்காட்ட 'மன்னர்கள் சகாப்தம்,'
'தேசிய எழுச்சி' என்னும் அத்தியாயங்களில் முயன்றிருக்கிறேன் . காங்கிரஸ்
தோன்றிய பின்னர் அதற்கு வெளியேயும் - அதனை விரும்பாத வட்டாரங்
களிலேயும் தமிழ்த்தொண்டு நிகழ்ந்தது என்பதனை எடுத்துக்காட்ட
அந்நாளில் சுயமரியாதை இயக்கத்தார் தமிழ்மொழிக்கு ஆற்றியுள்ள
தொண்டினைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.
விடுதலைப் போரின் தோழமை முகாம்களாகத் திகழ்ந்த கம்யூனிஸ்டுக்
கட்சி, தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றைச் சார்ந்தவர்களிலே சிலர் தமிழ்
மொழியின் வளர்ச்சிக்குச் செய்த தொண்டுகளையும் இயன்றவரை தொகுத்துக்
கொடுத்துள்ளேன்.
விடுதலைப் போர் முடிந்த பின்பும் தமிழ் வளர்க்கும் பணியிலே
தேசியவாதிகளில் பலர் தொடர்ந்து பங்கு பெற்று வந்துள்ளனர்.
இன்னமும் பங்கு பெற்று வருகின்றனர். அவர்கள் பற்றியோ, அவர்
களின் தொண்டுகள் பற்றியோ இந்த நூலில் விவரிப்பதற்கில்லை.