தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   6


 

அதுவும்   சிறந்தது  ஆயிற்று.  குறிஞ்சிக்குப்  பெரும்பான்மையும்
களவிற்  புணர்ச்சி  பொருளாதலின்,  அப்புணர்ச்சிக்குத்  தனி  இடம்
வேண்டுமன்றே, அது  கூதிர்காலத்துப் பகலும் இரவும் நுண்துளி சிதறி
இயங்குவார் இலராம் ஆதலான்.  ஆண்டுத் தனிப்படல்  எளிதாகலின்,
அதற்கு  அது சிறந்தது.  நடுநாள்  யாமமும் அவ்வாறாகலின் அதுவும்
சிறந்தது. மருதத்திற்கு  நிலன்  பழனஞ்சார்ந்த  இடமாதலான், ஆண்டு
உறைவார்  மேன்மக்களாதலின்,   அவர்  பரத்தையிற்  பிரிவுழி  அம்
மனையகத்து  உறைந்தமை   பிறர்  அறியாமை  மறைத்தல்  வேண்டி
வைகறைக்கண்   தம்மனையகத்துப்  பெயரும்வழி,   ஆண்டு மனைவி
ஊடலுற்றுச்   சார்கிலளாமாதலால்,  அவை  அந்நிலத்திற்குச் சிறந்தன.
நெய்தற்குப்    பெரும்    பான்மையும்   இரக்கம்    பொருளாதலின்,
தனிமையுற்று இரங்குவார்க்குப்     பகற்பொழுதினும்   இராப்பொழுது
மிகுமாதலின், அப் பொழுது வருதற்கேதுவாகிய எற்பாடு கண்டார் இனி
வருவது மாலையென வருத்த முறுதலின், அதற்கு அது சிறந்தது என்க.

பாலைப்பொருளாவது,   பிரிவு.   அப்   பிரிவின்கண் தலைமகற்கு
வருத்தம் உறும் என்று தலைமகள் கவலுங்கால் நிழலும்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:37:26(இந்திய நேரம்)