Primary tabs


கர்ப் பந்துசிறி தெறியினும்
இளந்துணை யாயமொடு கழங்குடன் ஆடினும்
உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ
மயங்குவியர் பொறித்த நுதலள் தண்ணென
முயங்கினள் வதியுமன்னே இனியே
தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி
நொதும லாளன் நெஞ்சுறப் பெற்றவென்
சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி
வல்லகொல் செல்லத் தாமே கல்லென
ஊரெழுந் தன்ன உருகெழு செலவின்
நீரில் அத்தத் தாரிடை மடுத்த
கொடுங்கோல் உமணர் பகடுதெழி தெள்விளி
நெடும்பெருங் குன்றத் திமிழ்கொள வியம்புங்
கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல்
பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅத்து
அருஞ்சுரக் கவலை அதர்படு மருங்கின்
நீழரை இலவத் தூழ்கழி பன்மலர்
விழவுத் தலைக்கொண்ட பழவிறன் மூதூர்
நெய்யுமிழ் சுடரிற் கால்பொரச் சில்கி
வைகுறு மீனில் தோன்றும்
மைபடு மால்வரை விளங்கிய சுரனே." (அகம்.18)
இஃது உடன்போக்கின்கண் வந்தது.
"நாளு நாளு மாள்வினை யழுங்க
இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென
ஒண்பொருட் ககல்வர்நங் காதலர்
கண்பனி துடையினித் தோழி நீயே." (சிற்றட்டகம்)
இது பிரிவுப் பொருளாற் பாலையாயிற்று.
"உயர்கரைக் கானியாற் றவிரறல் அகன்றுறை
வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரன் மகளே
கண்ணினுங் கதவநின் முலையே
முலையினுங் கதவநின் தடமென் தோளே." (ஐங்குறு.361)
இது புணர்தற்பொருளாயினும் கருப்பொருளாற் பாலையாயிற்று.
"சிலைவிற் பகழிச் செந்துவ ராடை "(ஐங்குறு.363) என்னும்
பாட்டினுள்"கொலைவி லெயினர் தங்கை" எனப் புணர்தற் பொருண்மை
வந்ததாயினும் பாலைக்குரிய மக்கட்பெயர் கூறுதலிற் பாலையாயிற்று.
பிறவும் அன்ன.
மருதத்திணைக்குச் செய்யுள்
"சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய
அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமலர் ஆரும் ஊர
யாரை யோநிற் புலக்கேம் வாருற்று
உரையிறந் தொளிருந் தாழிருங் கூந்தல்
பிறரும் ஒருத்தியை எம்மனைத் தந்து
வதுவை அயர்ந்தனை யென்ப அஃதியாங்
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறுடை யருஞ்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்கைச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரே." (அகம்.46)
இதனுள் மருதத்திற்கு ஓதிய நிலனும் பொழுதும் கருப்பொருளும்
ஊடற்பொருண்மையும் வந்தன."தாமரை வண்டூது பனிமலராரு மூர"
என்றமையான் வைகறை வந்தமை அறிக.
"பூங்கொடி மருங்கின் எங்கை கேண்மை
முன்னும் பின்னும் ஆகி
இன்னும் பாணன் எம்வயினானே."
இஃது உரிப்பொருளால் மருதமாயிற்று.
"ஓரை ஆயம் அறிய ஊரன்
நல்கினன் நந்த நறும்பூந் தண்தழை
மாறுபடின் எவனோ தோழி வீறுசிறந்து
நெடுமொழி விளங்குந் தொல்குடி
வடுநாம் படுதல் அஞ்சுதும் எனவே."
இது புணர்தற் பொருண்மையேனும், திணைநிலைப்பெயரால்
மருதமாயிற்று.பிறவும் அன்ன.
நெய்தல் திணைக்குச் செய்யுள்
"கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப
நீனிறப் பெருங்கடல் பாடழிந் தொலிப்ப
மீனார் குருகின் மென்பறைத் தொழுதி
குவையிரும் புன்னைக் குடம்பை சேர
அசைவண் டார்க்கும் அல்குறு காலைத்
தாழை தளரத் தூங்கி மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க்
காமர் நெஞ்சங் கையறுபு இனையத்
துயரஞ் செய்துநம் அருளா ராயினும்
அறாஅ லியரோ வவருடைக் கேண்மை
அளியின் மையின் அவணுறை முனைஇ
வாரற்க தில்ல தோழி கழனி
வெண்ணெல் லறிஞர் பின்றை ததும்புந்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை
அகமடற் சேக்குந் துறைவன்
இன்துயின் மார்பிற் சென்றவென் னெஞ்சே." (அகம்.40)
இது முதலும் கருவும் இரங்குதற் பொருண்மையும் வந்த நெய்தற்பாட்டு.
"அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்
பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
ஏதின் மாக்களும் நோவர் தோழி
என்றும் நோவார் இல்லைத்
தெண்கடற் சேர்ப்பன் உண்டவென் நலக்கே."
இது திணைநிலைப்பெயரானும் இரங்கற்பொருண்மையானும்
நெய்தலாயிற்று.
"கங்குலும் பகலுங் கலந்துக ஒன்றி
வன்புறை சொல்லி நீ