தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   67


 

டாற் போலப் பிற்றை ஞான்றும் காணலாகுமோ என ஆண்டுச் சேறலும்,
தலைமகளும் அவ்வாறே வேட்கையான் அடர்ப்புண்டு ஆண்டுவருதலும்
ஆகிய வழிப்புணர்ச்சி நிகழும். ஆண்டு ஆயத்தாரானாதல் பிறரானாதல்
இடையீடுபட்டுழித் தன் வருத்தத்தினைப்  பாங்கற்கு உணர்த்தி  அவன்
தலைமகள்நின்றுழியறிந்து கூற, ஆண்டுச்சென்று புணரும். அவ்விடத்தும்
இடையீடு பட்டுழித் தோழிவாயிலாக முயன்றெய்தும். இவ்வாறும், ஒரொ
வொன்று இடையீடுபட்டு வருதலும் உளவாம். அவ்வாறாயின், இயற்கைப்
புணர்ச்சி இடையீடு   பட்டுழிவரைந்தெய்தல்    தக்கதன்றோ   எனின்
வரைந்தெய்துந்திறம்   நீட்டிக்கு   மாயின் வேட்கை நிறுத்தலாற்றாதார்
புணர்ச்சி  கருதி  முயல்ப.  இவ்வாறு  சான்றோர் செய்யுள் வந்தனவும்
உளவோ   எனின்,  சான்றோர்   செய்யுட்களும்  இவ்வாறு  பொருள்
கொள்ள ஏற்பன உள, அவையாவன :-

"மருந்தின் தீரா மண்ணின் ஆகாது
அருந்தவ முயற்சியின் அகற்றலும் அரிதே
தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய
தேன்இமிர் நறவின் தேறல் போல
நீதர வந்த நிறைஅருந் துயரம் நின்
ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது
பிறிதில் தீரா தென்பது பின்நின்று
அறியக் கூறுதும் எழுமோ நெஞ்சே
நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்தன்
ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்
கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த
விளங்குமுத்து உறைக்கும் வெண்பல்
பன்மாண் சாயல் பரதவர் மகட்கே."

இதனுள்  "ஆடுகொடி  மருங்கின்  அருளின் அல்லது பிறிதில்
தீராது"
   என்பதனான்   இயற்கைப்   புணர்ச்சி   இடையீடு  பட்டுப்
புணர்ச்சி கருதிக் கூறியவாறு காண்க.

"மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வங்கொல் கேளிர் - குயில்பயிரும்
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும்என் நெஞ்சு."      (திணைமொழி 49)

இதனுள் ஐயநிலையைப் பாங்கற்கு உரைத்தலின் புணர்ச்சி இன்றாயிற்று.

"கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை
நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
அருளினும் அருளான் ஆயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம்
அருந்துயர் அவலந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே." (நற்றினை-140)

இதனுள்     'அருளினும்     அருளாளாயினும்'     என்றமையால்
கூட்டமின்மையும்  'பின்னிலை    முனியல்'   என்றமையால்   இரந்து
பின்னிற்  பானாகத்  துணிந்தமையும்,  தோழியிற் கூட்டத்து இயற்கைப்
புணர்ச்சிக்கு ஒருப்பட்டமையும் உணர்க.

"நறவுக்கமழ் அலரி நறவுவாய் விரிந்து
இறங்கிதழ் கமழும் இசைவாய் நெய்தற்
கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர்
நின்னையர் அல்லரோ நெறிதாழ் ஓதி
ஒண்சுணங் கிளமுலை ஒருஞான்று புணரின்
நுண்கயிற் றுறுவலை நுமரொடு வாங்கிக்
கைதை வேலி இவ்வூர்ச்
செய்தூட் டேனோ சிறுகுடி யானே."

பெரியீரெனச் சேட்படுத்தவழிக் கூறியது.

"கூறுவம் கொல்லோ கூறலம் கொல்லெனக்
கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது
நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி
நாள்சுரை யாமத்து விழுமழை கரந்து
கார்விரை கமழுங் கூந்தற் றூவினை
நுண்ணுதல் ஆகம் பொருந்தினள் வெற்பிள்
இளமழை சூழ்ந்த மடமயில் போல
வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து
வில்வகுப் புற்ற நல்வாங்கு குடச்சூல்
அம்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து
துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பிற் சான்ற பெரியள்
அம்மா அரிவையோ அல்லள் தெனா அது
ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பிற்
கவிரம் பெரிய வுருகெழு கவாஅன்
நேர்மலை நிறைசுனை உறையுஞ்
சூர்மகள் மாதோ என்னுமென் நெஞ்சே."     (அகம். 198)

இது தோழியிற் கூடிய தலைமகன் கூற்று.

"அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
கவரி மடமா கதூஉம் படர்சாரல்
கானக நாட மறவல் வயங்கிழைக்கு
யானிடை நின்ற புணை"             (ஐந்திணையெழு-1)

இதனானே முந்துற்ற கூட்டமின்மை யுணர்க.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:51:57(இந்திய நேரம்)