தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1148


வதிகாரத்து முதற்கணோத்து என்ன பெயர்த்தோவெனின், கிளவிகள்
பொருண்மே லாமாறு  உணர்த்தினமையின் கிளவியாக்கம்   என்னும்
பெயர்த்து ; என்னை?    ஒருவன்மேலாமாறிது,   ஒருத்திமேலாமாறிது,
பலர்மேலாமாறிது,   ஒன்றன்மேலாமாறிது,     பலவற்றின்மேலாமாறிது,
வழுவாமாறிது, வழுவமைதியாமாறிது எனப் பொருள்கண்மேல்  ஆமாறு
உணர்த்தினமையின் இப்பெயர்த்தாயிற்று. 

இவ்வோத்தின்      தலைக்கட்     கிடந்த     சூத்திரம்    என்
நுதலிற்றோவெனின்,  சொல்லும் பொருளும் வரையறுத்து உணர்த்துதல்
நுதலிற்று. 

*  என்பன என்றும், - என இவை என்றும் பிரதிபேதம். 

உரை :  உயர்திணை யென்மார் மக்கட் சுட்டு என்பது--உயர்திணை
யென்று சொல்லுவர் ஆசிரியர்  மக்களென்று  சுட்டப்படும்  பொருளை
யென்றவாறு ;   அஃறிணை   யென்மனார்   அவரல  பிற  என்பது--
அஃறிணை யென்று  சொல்லுவர் ஆசிரியர் மக்களல்லாத பிறபொருளை
யென்றவாறு : ஆயிரு    திணையின்     இசைக்குமன்     சொல்லே
என்பது--அவ்விருதிணையையும் இசைக்குஞ் சொல் என்றவாறு. 

எனவே,  உயர்திணைச்   சொல்லும்,   உயர்திணைப்  பொருளும்,
அஃறிணைச்  சொல்லும்,  அஃறிணைப்  பொருளும்  எனச் சொல்லும் பொருளும் அடங்கின. 

உலகத்தின்    மக்கள்  என்ற  பொருளை  உயர்திணை  யென்றது
கூறுபாடின்மையின். அஃறிணை   கூறுபாடுடைமையின்,    ‘அஃறிணை
யென்மனார்    அவரல’    என்னாது,   ‘பிற’   என்றான் ;   அவை,
உயிருடையனவும்  உயிரில்லானவும்  என  இரண்டு  கூற்றன என்றற்கு.
அவற்றது கூறுபாடெல்லாம் அறிந்துகொள்க. 

மற்று,  உயர்  என்னுஞ்  சொன்முன்னர்த் திணை என்னுஞ் சொல்
வந்து இயைந்தவா  றியாதோவெனின்,  ஒரு  சொன்முன்  ஒரு  சொல்
வருங்கால், தொகைநிலை வகையான் வருதலும்,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:10:52(இந்திய நேரம்)