தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1149


எண்ணுநிலைவகையான்  வருதலும்,  பயனிலைவகையான் வருதலும்
என மூன்று வகையான் அடங்கும். அவற்றுள், தொகைநிலை வகையான்
வந்தது,  ‘யானைக்கோடு’  என்பது ;  எண்ணுநிலைவகையான்  வந்தது,
‘நிலனும் நீரும்’ என்பது ;   பயனிலை  வகையான்  வந்தது, ‘சாத்தான்
உண்டான்’ என்பது.  அவற்றுள் இஃது உயர்திணை யென இறந்தகாலந்
தொக்க வினைத்தொகை. 

இனி,    என்மனார் என்பது, என்ப என்னும் முற்றுச் சொல்லைக் *
குறைக்கும்வழிக் குறைத்தல் (தொல். சொல்.  எச்ச.7) என்பதனாற் பகரங்
குறைத்து,   விரிக்கும்   வழி   விரித்தல்   (தொல்.  சொல்.  எச்ச. 7)
என்பதனால் மன்னும் 

*  ‘குறுக்கும்வழிக் குறுக்கல்’ - பாடபேதம். 

ஆரும்  என்பன இரண்டிடைச்சொற் பெய்து விரித்தான். என்மனார்
ஆசிரியர்   என்று   முடியற்பாற்று.   முற்றுச்சொல்   எச்சப்  பெயர்
என்பவாகலின், இது செய்யுணோக்கித் தொகுத்துக் கூறினான் என்பது. 

இனி,   மக்கட் சுட்டே   யென்பது,   மக்கள்   என்று  வரைந்து
சுட்டுதற்குக்  காரணமாகிய  தன்மை  யென்னும் ஒருவன். இனி, மக்கள்
எனினுஞ்  சுட்டு எனினும்  அவரையே  சொல்லியவா   றென்ப   ஒரு
திறத்தார். சுட்டெனவும்படும் மக்கள்  என்பது. இனிச் சுட்டே யென்புழி
ஏகாரம் ஈற்றசை யேகாரம். 

அஃறிணை யென்பது அல் திணை யென்றவாறு. அல்லதும் அதுவே,
திணையும் அதுவே. மேற்சொல்லப்பட்ட உயர்திணை  யல்லாத  திணை
அஃறிணை  யெனக் கொள்க.  ஈண்டும்  என்மனார்  என்பதற்கு  மேற்
சொல்லியவாறே சொல்லுக. 

இனி, அவர் என்னுஞ் சொல்லின் முன்னர் அல்ல என்னுஞ் சொல்
வந்து இயைந்தவா றியாதோவெனின்,  அவரினல்ல என்பான் அவரல்ல
என்றான், ஐந்தாம் வேற்றுமைப் பொருளென்ப
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:11:03(இந்திய நேரம்)