Primary tabs

து. இனி, அல்ல பிற என்பது, அல்லவும் பிறவும் என் உம்மைத்தொகை
யென்றலும் ஒன்று.
இனி, அவ் வுயர்திணை யல்லன வெல்லாம் அவ் வுயர்திணைபோல
ஓரினத்த
அல்ல ; தத்தம் வகையான் வேறுபட்டன உயிருடையனவும்
உயிரில்லனவும் என்பது.
ஏகாரம் ஈற்றசை யேகாரம்.
ஆயிரு திணையி னிசைக்கும் என்புழி, ஆயிரு திணையையும்
என ஐகார வேற்றுமை விரித்துரைக்க. இன்சாரியை. இசைக்கும்
என்பது
செய்யும் என்னும் பெயரெச்சம். மன் என்பது இடைச்சொல்.
ஏகாரம்
ஈற்றசை யேகாரம். (1)
2. ஆடுஉ வறிசொல் மகடூஉ வறிசொல்
பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி
அம்முப் பாற்சொல் லுயர்திணை யவ்வே.
இச் சூத்திரம்
என்னுதலிற்றோவெனின், மேல்
திணைகூறு
செய்தெனத் திணையுட் பால்கூறுசெய்தல் நுதலிற்று.
உரை : ஆடூஉவினை
யறியுஞ் சொல்லும், மகடூஉவினை யறியுஞ்
சொல்லும்,
பல்லோர் அறியுஞ் சொல்லொடு பொருந்தி அம் முப்பாலை
யறிவிக்குஞ்சொல் உயர்திணை யுடையன என்றவாறு.
ஆடூஉ என்றது ஆண்மகனை ; மகடூஉ என்றது பெண்
மகளை ;
பல்லோர் என்றது அவர் தொக்க பன்மையை.
இனி, அப் பொருள் மூன்று கூறுபடவே,
அவற்றை யுணர்த்துஞ்
சொல் மூன்று கூறுபடும் என்பது. இது தந்திரவுத்தி வகைமை கூறல்.
(2)
3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
றாயிரு பாற்சொ லஃறிணை யவ்வே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின்,
மேல், ‘அஃறிணை’
யென்றார், அதனை யினைத்துப் பால்படும்
என்று அது படும் பாலை
விரித்துணர்த்துதல் நுதலிற்று.
உரை :
ஒன்று, பல என்னும் இருபாலையும்
உணர்த்துஞ் சொல்
அஃறிணை யுடையன என்றவாறு. (3)
4. பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கி
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிள