Primary tabs

யாண்பால் உணர்த்தப்படும்.
படர்க்கையிடம் என்பது முன்னர் வினையியலுட் பெறுதும். வினை
யென்பது,
‘இருதிணை மருங்கின் ஐம்பாலறிய’
(தொல். சொல்,
கிளவி. 10) என்னுஞ் சூத்திரத்தாற்பெறுதும். உண்டான் என்றவிடத்து
நான்கெழுத்து உளவேயாயினும்,
னகரத்தை ஆடுஉவறியுஞ்
சொல்லென்றார், அதன்கட் டலைமைநோக்கி. ஏகாரம் பிரிநிலை. (5)
6, ளஃகா னொற்றே மகடூஉ வறிசொல்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், மகடூஉ அறிதற்கு ஈற்றெழுத்து
உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
ளஃகானாகிய வொற்று
மகடூஉவினை யறிவார்க்குக்
கருவியாஞ் சொல் என்றவாறு.
வரலாறு: உண்டாள்,
உண்ணாநின்றாள், உண்பாள் எனவும்; கரியள்,
செய்யள்
எனவும் வரும் வினையாலும் வினைக்குறிப்பாலும் மகடூஉவை
விளக்கியவா றறிக. (6)
7. ரஃகா னொற்றும் பகர விறுதியும்
மாரைக் கிளவி யுளப்பட மூன்றும்
நேரத் தோன்றும் பலரறி சொல்லே.
இச் சூத்திரம்
என்னுதலிற்றோவெனின், பல்லோரை யறியுஞ் சொற்கு
ஈறாம் எழுத்து உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
ரஃகானும் அதுவே ஒற்றும் அதுவே; பகரமும் அதுவே,
இறுதியும்
அதுவே ; மாரைக்கிளவி யுளப்பட மூன்றும் என்பது--மார்
என்னுஞ்
சொல் அகப்பட்ட மூன்றும் என்றவாறு ; நேரத்தோன்றும்
என்பது
-- நிரம்பத்தோன்றும் என்றவாறு; பலரறிசொல்லே
என்பது--
பலரை யறிதற்குக் கருவியாஞ் சொல் என்றவாறு.
‘நேரத் தோன்றும் பலரறி சொற்கு’ என்பான், உருபு தொகுத்துச்,
‘சொல்லே’ யென்றான் என்பது.
ஏகாரம் ஈற்றசை யேகாரம்.
வரலாறு: உண்டார்,
உண்ணாநின்றார், உண்பார் எனவும் ; கரியர்,
செய்யர்
எனவும் ரகர இறுதியாகி நின்ற படர்க்கை வினைமுற்றுச்
சொல்லால் உயர்திணைப் பன்மைப்பால் உணர்த்தப்படும்.
இனி, உண்ப, தின்ப
என எதிர்காலத்துப் பகரவிறுதி
முற்றுச்சொல்லால் உயர்திணைப் பன்மைப்பால் உணர்த்தப்படும்.
ஆர்த்தான் கொண்மார் வந்தார், பூக்குழா லென்னையர்க