Primary tabs

கணில்லாத தீது என மார் இறுதியாக
நின்ற எதிர்காலத்துப்
படர்க்கை வினைமுற்றுச் சொல்லால்
உயர்திணைப் பன்மைப்பால்
உணர்த்தப்படும். (7)
8. ஒன்றறி கிளவி தறட வூர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்.
இச்
சூத்திரம்
என்னுதலிற்றோவெனின்,
அஃறிணையொருமைப்பாற்குரிய எழுத்து உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
ஒன்றனை யறிவிக்குஞ் சொல் த,
ற, டக்களை யூர்ந்த
குற்றியலுகரத்து ஈறாகும் என்றவாறு.
வரவாறு:
உண்டது, உண்ணாநின்றது, உண்பது எனவும்; கரியது,
செய்யது எனவும்; வினையானும்
வினைக்குறிப்பானும் தகரமூர்ந்த
குற்றுகரத்தான் அஃறிணை யொருமைப்பால் விளங்கும்.
கூயிற்று, தாயிற்று எனவும்; கோடின்று, குளம்பின்று
எனவும் வரும்
றகரம்.
குண்டுகட்டு, குறுந்தாட்டு என வரும் டகரம். (8)
9, அஆ வஎன வரூஉ மிறுதி
அப்பான் மூன்றே பலவறி சொல்லே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அஃறிணைப்
பன்மைப்பாற்கு
ஈறாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
அ, அ, வ என்று சொல்லப்படுகிற இறுதிகளையுடைய அக்
கூற்று மூன்று சொல்லும் பலவற்றை றியுஞ்சொல் என்றவாறு.
வரலாறு:
அகரம்--உண்டன, உண்ணாநின்றன, உண்பன
எனவும் ;
கரிய, செய்ய எனவும் வரும்.
ஆகாரம்--உண்ணா, தின்னா எனவரும் : இது மூன்று காலத்தையும்
எதிர்மறுக்கும் எதிர்மறைக்கண் அல்லது பால்விளங்கி நில்லா.
வகாரம் -- உண்குவ, தின்குவ என எதிர்காலம் பற்றி வரும்.
‘வரூஉம் இறுதி யப்பால் மூன்று’ என்பது, இறுதியையுடைய அக்
கூற்று மூன்று என்றவாறு. (9)
10. இருதிணை மருங்கி னைம்பா லறிய
ஈற்றுநின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்
தோற்றந் தாமே வினையொடு வருமே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்,
மேல் பாலுணர்த்தப்பட்ட எழுத்து
இனைத்து என்பதூஉம், அவை வினை