Primary tabs

னக்கணின்று உணர்த்தும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
இருதிணையிடத்து ஐந்து பாலையும்
அறிய இறுதிக்கண்
நின்று உணர்த்தும் பதினோரெழுத்தும் வினையொடு வந்து புலப்படும்
என்றவாறு.
‘வினையொடு வருமே’ என்றார் பெயர்க்கண்
திரியவு நிற்கும்,
திரியாமையு நிற்கு மாகலான் என்பது. உண்டான் என்றக்கால்
திரிவில்லை. கொற்றன் என்பது இரு திணை யொருமைப்பாற்கும் ஏற்கும்
என்பது.
மற்றுப் பதினோரெழுத்தும் என்றது என்னை? ணஃகானொற்றும்,
ளஃகானொற்றும்,
ரஃகானொற்றும், குற்றுகரமும், அவ்வும் ஆவும் என
அவை
ஆறெழுத்தான் அடங்கும் பிறவெனின், அடங்கும்; அடங்குமே
யெனினும்
ஈண்டுப்பதினொன்றென்று வேண்டினார். என்னை? பளிங்கு
செம்பஞ்சி
படுத்தாற் செம்பளிங்கு எனப்படும்; கரும்பஞ்சி யடுத்தாற்
கரும்பளிங்கு
எனப்படும் ; அதுபோலச் சார்ந்து வந்தவற்றது
வேற்றுமைபற்றி வேறு பெயர் கொள்ளப்பட்டது என்பது. (10)
11. வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
பெரியற் றோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே.
இச்
சூத்திரம் என்னுதலிற்றோவெனின், வழுக்காத்தல் நுதலிற்று. வழுக்
காக்குமிடத்து
வழுவற்க என்று காத்தலும், வழீஇயமைக என்று காத்தலும்
என இரண்டு ; அவற்றுள் இது வழுவற்க என்று காத்தது.
உரை:
வினையிற் றோன்னும் பாலறி
கிளவியும் என்பது --
வினையிற் பாலறியப்படும் பொருளும் என்றவாறு;
ஈண்டுப் பொருளைக்
கிளவி யென்றாரென வுணர்க. பெயரிற்றோன்றும் பாலறி கிளவியும்
என்பது - பெயரினாற்பாலறியப்படும்
பொருளும் என்றவாறு ;
மயங்கல்கூடா என்பது - அவை விராதல் பொருந்தா என்றவாறு ; தம்
மரபினவே என்பது - தத்தம் இலக்கணத்தனவேயாகும் என்றவாறு.
அவை தம் மரபினான்