தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1156


எல்லா மயக்கமும் வேண்டினமை  கூறினானாம்  என்பது.  அவை
திணைபற்றியும் பால்பற்றியுமன்றி வருமாறில்லை. 

செப்புவழூஉ, வினாவழூஉ  முன்னர்ச்   சொல்லுதும்   ;  ஒழிந்தது
ஈண்டுக் காட்டுதும். 

இடவழூஉ  வருமாறு: உண்டேன்  நீ, உண்டேன் அவன், உண்டாய்
யான், உண்டாய் அவன், உண்டான் யான், உண்டான் நீ என இவை. 

இனி, காலவழூஉ வருமாறு  :  செத்தானைச்  சாம் என்றலும், குளம்
நீர் புகுந்து நிறையும் எனற்பாலதனை நிறைந்தது என்றலுமாம். 

இனி, மரபு  வழூஉ  வருமாறு :  மேய்த்தல் ஒப்புமையான், யானை
மேய்ப்பானை    இடையன்  என்றும்,  ஆடு  மேய்ப்பானைப்  பாகன்
என்றுஞ் சொல்லுதல். (11)  

12.  ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி
ஆண்மை யறிசொற் காகிட னின்றே.
 

இச்    சூத்திரம்   என்னுதலிற்றோவெனின்,   எய்தியது   விலக்குதல்
நுதலிற்று. 

உரை:   ஆண்மையிற்றிரிந்து    பெண்மை     நோக்கி    நின்ற
பெயர்ப்பொருள்    ஆண்மகனை    யறிவிக்கும்    ஈற்றெழுத்தினாற்
சொலற்பாட்டிற்கு  ஏலாது  என்றவாறு.  ஒழிந்த  இரண்டு  பெயர்க்கும்
ஒக்கும் என்பதாம். 

‘ஆகிடனின்றே’ என்பதனாற் சிறுபான்மை, ‘பேடி வந்தான்’ எனவும்
ஆண்பாற்கும் ஏற்கும். (12)  

13. செப்பும் வினாவும் வழாஅ லோம்பல். 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோவெனின்,  செப்புவழுவும் வினாவழுவும்
காத்தல் நுதலிற்று. 

உரை:   செப்பும்   வினாவும்   வழாஅல்   ஓம்பல்  என்பது  --
செப்பினையும் வினாவினையும் இழுக்குதலைப் போற்றுக என்றவாறு. 

அவை வழுவாது வருமாறு: ‘நுந்நா டியாது?’ என்றால், ‘தமிழ் நாடு’
என்றல்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:12:20(இந்திய நேரம்)