தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1162


நல்ல ஆயின.

உம்மை எதிர்மறை.

மற்று,     வாளாதோதுஞ்  சூத்திரமெல்லாம்  வழக்கே  நோக்கும்,
செய்யுட்காயிற்   கிளந்தேயோதும்   ;  அதனால்,  ‘வழக்கினுள்’  என
வேண்டா  ;  அம்மிகுதியான்  ஆக்கமும்  காரணமும் இன்றிவருதலும்,
காரணம்    கொடுத்து   ஆக்கமின்றி   வருதலும்   என   இரண்டுங்
கொள்ளப்படும்.

வரலாறு:  ‘பைங்கூழ் நல்ல’  எனவும்,  ‘எருப்பெய்து  இளங்களை
கட்டு நீர் கால்யாத்தமையாற் பைங்கூழ் நல்ல’ எனவும் வரும். (22) 

23.  பான்மயக் குற்ற வையக் கிளவி
தானறி பொருள்வயிற் பன்மை கூறல்.
 

இச்    சூத்திரம்    என்னுதலிற்றோவெனின்,   உயர்திணைப்   பால்
ஐயத்துக்கட் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

உரை:  திணை யறிந்து பாலையந்  தோன்றியவதனை அத்திணைப்
பன்மைமேல் வைத்துச் சொல்லுக என்றவாறு.

வரலாறு:     ‘ஒருவன்     கொல்லோ,   ஒருத்தி    கொல்லோ
தோன்றாநின்றார்’ என வரும்.

இனி, உயர்திணைப் பாலையம் என்பதோர் ஒப்பிற் கொள்க. (23) 

24.  உருவென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்
இருவீற்று முரித்தே சுட்டுங் காலை.
 

இச்  சூத்திரம்   என்னுதலிற்றோவெனின்,  திணை  ஐயத்துக்கண்ணும்,
அஃறிணைப்  பாலையத்துக்கண்ணும்  சொல்  நிகழுமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

உரை:  திணையையம்  தோன்றினவழி   ஒரு   வடிவு  சொல்லக்
கருதினும்,  அஃறிணையை  ஒன்று  பல என்று பிரித்துச் சொல்லினும்
மேலடுத்த போலப் பொதுவினானே சொல்லுக என்றவாறு.

வரலாறு: ‘குற்றிகொல்லோ  மகன்கொல்லோ  தோன்றுகின்ற  உரு’
என வரும் ; இது திணை ஐயம்.

‘ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய் புக்க பெற்றம்’  எனவரும்  ;
இஃது அஃறிணைப் பாலையம்.

உரு எனவே    திணையயம்    என்பதோர்   ஒப்பிற்   பெற்றாம்.
பாலையமாயின் தத்தம் பகுதியொடு முடியும் என்பது. (24) 

25.  தன்மை சுட்டலு முரித்தென மொழிப
அன்மைக் கிளவி வேறிடத் தான.
 

இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், ஐயப்பட்ட அப் பொருளைத்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:13:25(இந்திய நேரம்)