Primary tabs

கூறவே, வழக்கிற்கும் இனமில் பண்புகொள் பெயர்கள் உள என்பது
போந்ததாம்.
வரலாறு:
பெருங்கொற்றன், பெருங்கூத்தன் என்பன போல்வன,
வழக்கிடைப் பண்புப் பெயர் வருங்கால் குணமின்றி விழுமிதாகச்
சொல்லுதற்கு வந்து நிற்கும். (18)
19. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்.
இச் சூத்திரம்
என்னுதலிற்றோவெனின், உலகத்துப் பொருளெல்லாம்
இரு வகைப்படும், இயற்கைப் பொருளும் செயற்கைப் பொருளும் என
; அவற்றுள், இயற்கைப் பொருண்மேற் சொல் நிகழற்பாலவாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
உலகத்து இயல்பாகி வாராநின்ற பொருளைச் சொல்லுமிடத்து
இத்தன்மைய என்று சொல்லுக என்றவாறு.
வரலாறு: நிலம்வலிது ; நீர் தண்ணிது எனவரும். (19)
* ‘வெண்கோட் டியானைச் சேரனைப் பாடியும்’ -- கல்லாடர்
உரை.
20. செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின்,
செயற்கைப் பொருண்மேற்
சொல் நிகழ்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
செயற்கையினாகிய பொருள்களை யெல்லாம் ஆக்கங்
கொடுத்துச் சொல்லுக என்றவாறு.
வரலாறு: மயிர் நல்ல ஆயின ; பயிர் நல்ல ஆயின என வரும்.
ஆயின என்பது ஆக்கம். (20)
21. ஆக்கந் தானே காரண முதற்றே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், மேலதற்கோர் புறநடை
யுணர்த்துதல் நுதலிற்று.
உரை:
அவ்வாக்கந்தனைச்
சொல்லுமிடத்துக் காரணம்
முன்வைத்துச் சொல்லுக என்றவாறு.
வரலாறு:
‘கடுவும் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர்
நல்ல ஆயின்’ என வரும். (21)
22. ஆக்கக் கிளவி காரண மின்றியும்
போக்கின் றென்ப வழக்கி னுள்ளே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், எய்தியது விலக்குதல்
நுதலிற்று.
உரை:
ஆக்கக் கிளவி காரணமின்றியுஞ் சொல்லப்படும் வழக்கினுள்
என்றவாறு.
போக்கு என்பது குற்றம்.
வரலாறு :
மயிர்