Primary tabs

ஒழித்து ஒழிந்த தற்கிழமையினாயிற்று.
வரலாறு :
எட்குப்பை, நெற்குப்பை என்றால், எள்ளின் வேறு
குப்பை, நெல்லின் வேறு குப்பை என்பதொன் றில்லை. எட்சாந்து,
கோட்டுநூறு என்பனவும் அவை. (7)
87. ஒருவினை யொடுச்சொல் லுயர்பின் வழித்தே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது மூன்றாம்
வேற்றுமைப்பொருட்கண்ணதோர்சொல்வன்மையுணர்த்துதல் நுதலிற்று.
உரை : மூன்றாம்
வேற்றுமைப் பொருள் விரிப்புழி, ‘அதனொ
டியைந்த ஒருவினைக் கிளவி’ (வேற்றுமை- 11) என்றான். அதாவது,
ஒருவினையினுழை ஒடுக்கொடுத்துச் சொல்லுக என்றவாறு ; ஆகலான்
இவ்வாறு இச் சொல்லினான் இயைபுடைத்தாய் ஒருவினைகொண்டு
வருங்கால் அவ்வொடு உயர்வுபற்றி வரும் என்றவாறு.
வரலாறு : ‘அரசனொடு வந்தார் சேவகர்’ எனவரும்.
மற்று, ‘நாயொடு நம்பி வந்தான்’ என இழிவுபற்றி வருமால் எனின்,
உயர்வுதாம் பல : குலத்தால் உயர்தலும், தவத்தால் உயர்தலும்,
நிலையால் உயர்தலும், உபகாரத்தால் உயர்தலும் என. அவ்விழிந்தவழி
ஒடு வைத்துச் சொல்லியது அந்நிலைக்கண் அது சிறப்புடைத்தாகலின்
என்பது. (8)
88. மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய
வாக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி
நோக்கோ ரனைய வென்மனார் புலவர்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மூன்றாவதும் ஐந்தாவதும்
ஏதுப்பொருட்கு ஒத்த கிழமைய என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரை : மூன்றாம் வேற்றுமையானும், ஐந்தாம்
வேற்றுமையானும்
எடுத்தோதப்பட்ட ஆக்கமொடுபுணர்ந்த ஏதுப்பொ