Primary tabs

ாருண்மை ஆராயுங்கால் ஒருதன்மைய என்றவாறு.
வரலாறு : வாணிகத்தான்
ஆயினான் ; வாணிகத்தின் ஆயினான்
என வரும். (9)
80. இரண்டன் மருங்கி னோக்க னோக்கமவ்
விரண்டன் மருங்கி னேதுவு மாகும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ
வெனின், இதுவும் மேற்
சூத்திரத்திற்குரிய முடிவே சார்ந்தது என்றவாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : இரண்டாம் வேற்றுமை,
நோக்கியநோக்கமும்,
நோக்கல்நோக்கமும் என இரண்டு பொருளும் உடைத்து. மேற்றான்,
‘நோக்கலின்’ (வேற்றுமை - 10) என்றான் ; என்புழி, ‘நோக்கலின்’
எனவே அவ்விரண்டு நோக்கமும் அடங்கின.
நோக்கிய நோக்கம் என்பது பொறியான்
நோக்குதல் ; அது, பூணை
நோக்கினான் எனவரும்.
‘நோக்கல் நோக்கம்’ என்பது
‘வானோக்கி வாழும்’
(குறள். செங்கோ - 2)
என்பது. இது கண்ணான் நோக்கியது
அன்மையின் நோக்கல்நோக்கம்
ஆயிற்று. அப் பொருண்மைக்கண்ணாயின்
முன்னர்ச் சொல்லிய
இரண்டு வேற்றுமைப் பொருளும் ஆம் என்றவாறு.
வரலாறு :
‘வானோக்கி வாழும்’ (குறள். செங்கோ-2) என்றக்கால்,
வானை நோக்கி வாழும் என்பது ; இனி, வானானாய உபகாரம் நோக்கி
வாழும் என்பது ; வானினாய உபகாரம் நோக்கி வாழும் என்பதூஉமாம்.
(10)
90.
அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயி
னதுவென் னுருபுகெடக் குகரம் வருமே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஆறாவது நான்காவதனொடு
மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : மேல், ‘இயற்கையி
னுடைமையின் முறைமையின்’
(வேற்றுமை - 14) என, ஆறாவதனை முறைமைப் பொருட்கு
உரித்தென்று ஓதினான் ; அம் முறைமைப் பொருள்
உயர்திணைக்காயின் அது என் உருபு கெடக் குகரம் வரும் என்றவாறு.
வரலாறு : நம்பிக்கு மகன் என
வரும். நம்பியது மகன் என்புழி
இழுக்குள்ளது கண்டு, அது காத்தவாறு. (11)
91. தடுமாறு தொழிற்பெயர்க் கிர