தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1199


ரண்டு மூன்றுங்
கடிவரை யிலவே பொருள்வயி னான.
 

இச்     சூத்திரம்    என்னுதலிற்றோ    வெனின்,    இரண்டாவதும்
மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை     :    தடுமாறு      தொழிற்பெயர்க்கு     இரண்டாம்
வேற்றுமைப்பொருளும்    மூன்றாம்வேற்றுமைப்பொருளும்    ஒக்கும்
என்றவாறு. 

வரலாறு : புலி கொல் யானை என்பது. அது விரிப்புழிப், புலியைக்
கொன்ற  யானை  --  புலி  கொல்  யானை ; புலியாற் கொல்லப்பட்ட
யானை -- புலி கொல் யானை ; என இரண்டிற்கும் ஒக்கும். 

தடுமாறுதல் என்பது   இரண்டிற்கு   உரித்தாய்ச்  சென்று  வருதல்
ஈண்டுக் கோறற்றொழில் இரண்டிற்கும் ஒக்கும். (12) 

92.  ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேற்றுமை தெரிப வுணரு மோரே. 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  மேல்  எடுத்தோதப்பட்ட
தடுமாறுதொழிற்பெயரை  உணரும்  ஆறு  இது  என்பது உணர்த்துதல்
நுதலிற்று. 

உரை     : புலி கொல் யானை என்பது ; அத்தொகைக்கு யானை
என்பது  ஈற்றது.  இவ்  வீற்றுப் பெயர் முன்னர்ப் பொருளறிய வருஞ்
சொல்,    ‘மெய்யறி   பனுவல்’   என்பதனான்,   அவ்   விரண்டன்
வேற்றுமையும் தெரியப்படும் என்றவாறு. 

வரலாறு :  புலி கொல் யானைக்கோடு  வந்தது  எனின்,  புலியாற்
கொல்லப்பட்டது யானை என விளங்கும். 

இனிப், புலிகொல் யானை ஓடுகின்றது  எனின், புலியைக் கொன்றது
யானை என விளங்கும். 

இனி, ஈற்றுப் பெயர் முன்னர்ப் பொருளறிய வந்த சொல்லான் அவ்
வேற்றுமை  தெரிப  என்பது.  பொருளறிய  வாராத  சொல்லான் அவ்
வேற்றுமை தெரியலாகா என்பது. 

வரலாறு : புலி கொல் யானை கிடந்தது, தோன்றும் என்பது. (13) 

93.  ஓம்படைக் கிளவிக் கையு மானுந்
தாம்பிரி விலவே தொகைவரு காலை. 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ வெனின், இன்னும் அவற்றுக்கண்ணே
ஆவதோர் முறைமை உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:20:13(இந்திய நேரம்)