தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1200


ஓம்படைப் பொருட்கு ஐயும் ஆனும் ஒத்த கிழமைய என்றவாறு. 

ஓம்படுத்தல் என்பது  போற்றுதல்.  ‘தொகைவரு  காலை’  என்பது,
தொகையி னிலைக்கண்ணே இம்மயக்கம் ஆவது என்றவாறு. 

வரலாறு     : ‘புலி போற்றிவா வாழி யைய’ என்புழிப் புலியைப்
போற்றிவா  என்றும், புலியினான் ஆய ஏதம் போற்றிவா என்றும் ஆக
என்பது. 

‘தொகைவரு காலை’ என்பதனை யாண்டும் ஒட்டிக் கொள்க
என்பது.  (14)  

94.  ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்
கேழு மாகு முறைநிலத் தான.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின், ஆறாவதனோடு ஏழாவதன்
மயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :  ஆறாவதனோடு  எடுத்தோதப்பட்ட  வாழ்ச்சிப்பொருட்கு
ஏழாவதும் ஆம் உறையும் நிலமாகலான் என்றவாறு. 

வரலாறு : காட்டது  யானை என்புழிக், காட்டுள் யானை என்றுமாக
என்பது. (15) 

95.  குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி
யப்பொரு ளாறற் குரித்து மாகும்.
 

இச்   சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  நான்காவதன்  பொருள்
ஆறாவதற்குச் செல்லுமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :   நான்காம்  வேற்றுமை   தொக்குக்  கொடை  யெதிர்ந்து
நின்றவழி ஆறாவது சொல்லவும் அமையும் என்றவாறு. 

வரலாறு  :  நாகர்பலி  என்பது  ஆண்டு  நாகர்க்குப்  பலி  என
நான்காவது  தொக்குநின்றது  ;  அந்  நிலைக்கண்  நாகரது  பலி என
ஆறாவதும் ஆக என்றவாறு. 

கொடை   எதிர்தல் என்பது -- விழுப்ப முடையாரை நுதலியக்காற்
கொண்டுவைத்து  விரும்பிக் கொடுத்தல். நாகர்பலி என்பது அவர்க்குத்
திரிபில்லாமையினான்    நாகரது   பலி    என   உடைமைக்கிழமை
செப்பலாயிற்று என்பது கருத்து. (16) 

96.  அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு
மெச்ச மிலவே பொருள்வயி னான
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:20:23(இந்திய நேரம்)