தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1201


இச்    சூத்திரம்    என்னுதலிற்றோ    வெனின்,    ஐந்தாவதனோடு
இரண்டாவதன் மயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : அச்சப் பொருண்மைக்கு ஐந்தாம் வேற்றுமையும் இரண்டாம்
வேற்றுமையும் ஒத்த கிழமைய என்றவாறு. 

வரலாறு  : புலியின் அஞ்சும், புலியை அஞ்சும் என வரும். 

புலியை  அஞ்சும்  என்புலிப்  புலி   காரணமாக   அஞ்சும்  என
மாறுகொள்க. (17) 

97.  அன்ன பிறவுந் தொன்னெறி பிழையா
துருபினும் பொருளினும் மெய்தடு மாறி
யிருவயி னிலையும் வேற்றுமை யெல்லாந்
திரிபிட னிலவே தெரியு மோர்க்கே.
 

இச்     சூத்திரம்    என்னுதலிற்றோ    வெனின்,    சொல்லப்பட்ட
மயக்கத்திற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. 

உரை  : அவைபோல்வனவும்   பிறவும்  மேற்கொண்டு  அடிப்பட
வழங்கும்   வழக்கொடு   மலையாது   உருபும்  பொருளும்  தம்முள்
ஒன்றனோடொன்று    தடுமாறி    அவ்விரண்டிடத்தும்   நிலைபெற்ற
வேறுபாடு வழு என்று களையப்படா ஆராயுமிடத்து என்றவாறு. 

‘உருபினும்     பொருளினும் மெய்தடுமாறி’ என்பது, யாண்டு உருபு
சென்றது ஆண்டுப் பொருள் சென்றது எனப்படும் ; யாண்டுப் பொருள்
சென்றது  ஆண்டு  உருபு  சென்றது  எனப்படும்  என்பது.  ‘பிறவும்’
என்றதனால், முறைக் குத்துக் குத்தினார் என்புழி, முறையிற் குத்தினார்
என்றும்,  முறையாற் குத்தினார்  என்றும்,  ‘கடலொடு  காடொட்டாது’
என்புழிக், ‘கடலைக் காடொட்டாது’ என்றும் வருவன கொள்க. (18) 

98.  உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி
யொருசொன் னடைய பொருள்சென் மருங்கே.
 

இச்   சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  பல  உருபு  தொடர்ந்து
அடுக்கி நின்றவழிப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : பல உருபு தொடர்ந்து  அடுக்கி  நின்றவிடத்து இறுதியுருபு
முடிந்த முடிவே ஒழிந்தனவற்றிற்கும் முடிபாக என்றவாறு. 

வரலாறு : யானையது கோட்டை நுனிக்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:20:34(இந்திய நேரம்)