தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1202


கட் குறைத்தான் என வரும். 

இரண்டாம்  வேற்றுமையும்  ஏழாம்   வேற்றுமையும்   குறைத்தான்
என்னும் ஒரு வினையானே முடிந்தவாறறிக. 

‘தினையிற் கிளியைக் கடியும்’ என்பதும் அது. (19) 

99.  இறுதியு மிடையு மெல்லா வுருபு
நெறிபடு பொருள்வயி னிலவுதல் வரையார்.
 

இச்    சூத்திரம்    என்னுதலிற்றோ    வெனின்,    உருபு   நிற்கும்
இடவேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. 

இறுதி : கடந்தான் நிலத்தை ; வந்தான் சாத்தனொடு ; கொடுத்தான்
சாத்தற்கு ; வலியான் சாத்தனின் ; 

ஆடை சாத்தனது ; இருந்தான் குன்றத்துக்கண் ; என வரும். 

இனி,  இடை வருமாறு  :  நிலத்தைக்  கடந்தான்  ;  சாத்தனொடு
வந்தான்  ;  சாத்தற்குக் கொடுக்கும் ; சாத்தனின் வலியன் ; சாத்தனது
ஆடை ; குன்றத்துக்கண் இருந்தான் ; என வரும். 

இனி,     நெறிப்படுத்துதல்      என்பது     வழக்குப்படுத்தல்;
வழக்குப்படுவழியே அவை நிலையுடைத்தாவது ; அல்லாத வழி அவை
நில்லா   என்பது.   அவ்வழிக்கொண்டான்   என்புழி   அவ்வழிக்கட்
கொண்டான் என வேண்டுவது என்றவாறு. பிறவும் அன்ன. (20) 

100. பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலு
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  இதுவும் அவ் வேற்றுமை
மயக்கத்துட் புறத்துப்படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : ஓர் உருபு ஓர் உருபினை யேற்றலும், உருபுகள் புலப்படாது
நிற்றலும் இலக்கணத்துப் பட்டன என்றவாறு. 

பிறிதுபிறிதேற்றல் என்பது, ஆறாம் வேற்றுமை உருபு  தானல்லாத
உருபுகளை ஏற்பது. 

அது  வருமாறு :  சாத்தனதனை, சாத்தனதனொடு என  ஆறாவது
ஒழித்து, ஏழாவதன்காறும் ஒட்டுக. 

இனி, உருபு  தொக  வருதல் :  நிலத்தைக்  கடந்தான்  என்புழி,
வேற்றுமை யுருபு தொக்கு, நிலங்கடந்தான் என வரும். 

இறுதிக்கண், ‘கடந்தான்நிலத்தை’ என்புழிக், ‘கடந்தான்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:20:45(இந்திய நேரம்)