Primary tabs

நிலம்’ என வரும். மற்றையனவும் அவ்வாறே தொகும் என்பது. (21)
101. ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகாஅ விறுதி யான.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,
மேல் உருபுகள் தொக
வருவன என்றான், அத்தொக வருவனவற்றது நிலைமை ஒவ்வாதது
கண்டு அஃது உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
இரண்டாம் வேற்றுமைப் பொருளும், ஏழாம் வேற்றுமைப்
பொருளும் அல்லாதவழி இறுதிக்கண் தொகவாரா என்றவாறு.
அது சொல்லவே, மற்றைய உருபெல்லாம் இறுதிக்கண் விரிந்தே
வருகுவ என்பதாம்.
வரலாறு :
கடந்தான் நிலம், கடந்தான் நிலத்தை ; இருந்தான்
குன்றத்து, இருந்தான் குன்றத்துக்கண் ; எனத் தொக்கும் விரிந்தும்
வந்தவாறு.
வந்தான் சாத்தனொடு என்பது வந்தான் சாத்தன் என ஒடு
தொகுநிலைப்படுங்கொலோ எனிற், படாது என்பது. மற்றையனவும்
அன்ன.
(22)
102. யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,
உருபுகள் ஒரோ வழித்
தத்தம் பொருண்மை யின்றியும் மயங்குதலுரிய என்பது உணர்த்துதல்
நுதலிற்று.
உரை : யாதானும் ஓர் உருபிற் கூறப்பட்டதே ஒரு சொல்லெனினும்,
கூறிய அவ்வுருபின் பொருள் படுங்கொல்லோ எனின், படாது என்பது.
அக் கூறப்படாத பிற உருபு உளவென்றே அவற்றதுமாகும், அச்சொல்
அவற்றுப் பொருள்படச் சொல்லின் என்றவாறு.
வரலாறு :
‘கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற
முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’
என்னும் பாட்டினுள், ‘மணற்கீன்ற’
என நான்காவதன் உருபு
வந்ததேனும், மணலுள் ஈன்ற என ஏழாவதன் உருபே கொள்க,
அதற்கேற்ற பொருட்டாகலின். இது, வழக்கினுள் ஒன்றன்
பொருண்மைக்கட் பிறிதோர் உருபு பொருளொடுபடாது சென்று நிற்ப