தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1204


வழங்குதலும் உண்மை கண்டு அது காத்தவாறு. (23) 

103. எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபிற்
பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே.
 

இச்  சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,   வேற்றமை   யுருபுகள்
தம்பொருள்  மாறுபட  நின்றுழியும் தம்பொருள என்பது உணர்த்துதல்
நுதலிற்று. 

உரை :  எதிர் மறுத்துச் சொல்லிற்றுழியும்  தம் பொருண்மை மரபு
திரியா என்றவாறு. 

வரலாறு    : மரத்தைக் குறையான் என்புழி, இரண்டாவதன் பின்
அப்பொருள்  இல்லைமன்  ;  இல்லை  யெனினும்  அப்பொருட்டாக
என்பது. 

பிறவேற்றுமைப் பொருள்களையும் இவ்வாறே  எதிர்மறுத்து  ஒட்டிக்
கொள்க. (24) 

104. கு ஐ ஆன்என வரூஉ மிறுதி
அவ்வொடுஞ் சிவணுஞ் செய்யு ளுள்ளே.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  அவ்  வுருபுகள் ஒரு சார்
செய்யுளுள் திரிபுபட நிற்றல் கண்டு, அஃது உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :   கு  ஐ  ஆன்  என  வரூஉம்  மூன்றுருபின்  இறுதியுஞ்
செய்யுளுள் அகர ஈறாகி நிற்கும் என்றவாறு. 

வரலாறு முன்னர்ச் சூத்திரத்துட் காட்டுதும். (25) 

105. அவற்றுள்
அஎனப் பிறத்த லஃறிணை மருங்கிற்
குவ்வு மையு மில்லென மொழிப.
 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,  எய்தியது  விலக்குதல்
நுதலிற்று. 

உரை : அவற்றுள் குவ்வும்  ஐயும்  அஃறிணைக்கண் அகரவீறாதல்
எய்தா என்றவாறு. 

மற்றை     ஆன்     உருபாயின்     அஃறிணைக்கண்ணும்
உயர்திணைக்கண்ணும் எய்தும் என்பது. 

இனி, உயர்திணைக்கட் குவ்வும் ஐயும் வருமாறு : 

‘கடிநிலை யின்றே யாசிரியக்கு’ எனற்பாலது,  ‘ஆசிரியர்க்க’ (தொல்.
எழுத்து. புள்ளிமயங் - 94) என்றாயிற்று. 

‘காவலோனைக்   களிறஞ்சும்மே’   எனற்பாலது,    ‘காவலோனக்
களிறஞ்சும்மே’ என்றாயிற்று. 

இனி, ஆன் இருதிணைக்கண்ணும் வருமாறு : 

‘புள்ளினான’

‘புலவரான’

என இருவழியுங் கண்டுகொள்க. (26) 

106. இதன திதுவிற் றென்னுங் கிளவியு
மதனைக் கொ
  
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:21:08(இந்திய நேரம்)