Primary tabs

ாள்ளும் பொருள்வயி னானு
மதனாற் செயற்படற் கொத்த கிளவியு
முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும்
பால்வரை கிளவியும் பண்பி னாக்கமுங்
காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும்
பற்றுவிடு கிளவியுந் தீர்ந்துமொழிக் கிளவியு
மன்ன பிறவு நான்க னுருபிற்
றொன்னெறி மரபின தோன்ற லாறே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,
நான்காம் வேற்றுமைய
ஏனைய வேற்றுகை்கண்ணெல்லாஞ் சென்று மயங்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
உரை : இதனது
இதுவிற்று என்பது -- யானையது கோடு கூரிது
என்புழி, ஆண்டு நான்காவது சென்று, யானைக்குக் கோடு கூரிது
என்றாக என்பது ;
அதனைக் கொள்ளும் பொருள் என்பது -- இவளைக் கொள்ளும்
இவ்வணி என்புழி, இவட்குக் கொள்ளும் இவ்வணி என்றாக என்பது ;
அதனாற் செயற்படற்கொத்த கிளவி என்பது --
வாயாற் றக்கது
வாய்ச்சி என்புழி, வாய்க்குத் தக்கது வாய்ச்சி என்றாக என்பது ;
முறைக்கொண்டெழுந்த
பெயர்ச்சொற் கிளவி என்பது --
ஆவினது கன்று என்புழி, ஆவிற்குக் கன்று என்றாக என்பது ;
பால்வரை கிளவி என்பது -- கருவூரின்
கிழக்கு என்புழிக்,
கருவூர்க்குக் கிழக்கு என்றாக என்பது ;
பண்பின் ஆக்கம் என்பது -- சாத்தனின் நெடியன் என்புழிச்,
சாத்தற்கு நெடியன் என்றாக என்பது ;
காலத்தின் அறியுங் கிளவி என்பது --
மாரியுள் வந்தான்
என்புழி, மாரிக்கு வந்தான் என்றாக என்பது ;
பற்றுவிடு கிளவி என்பது -- ஊரிற் பற்றுவிட்டான் என்புழி,
ஊர்க்குப் பற்றுவிட்டான் என்றாக என்பது ;
தீர்ந்து மொழிக் கிளவி என்பது --
ஊரிற் தீர்ந்தான் என்புழி,
ஊர்க்குத் தீர்ந்தான் என்றாக என்பது ;
அன்ன பிறவும் என்றதனால் -- ஊரிற் சேயன், ஊர்க்குச் சேயன்
என்றாக என்பதும், உறையூரிற் பெரிது கருவூர் என்புழி, உறையூர்க்குப்
பெரிது கருவூர் என்றாக என்பதும், பிறவும் இவ்வாறாக வருவன
கொள்க.
இவையெல்லாம் நான்கனுருபிற் றோன்றுதன்