Primary tabs

மேற்கொண்டு அடிப்பட்டு வந்த வழக்கு என்றவாறு. (27)
107.
ஏனை யுருபு மன்ன மரபின
மான மிலவே சொன்முறை யான.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் மயக்கமே
உணர்த்துதல் நுதலிற்று.
உரை : நான்காம்
வேற்றுமை உருபல்லன பிறவும்
ஒன்றன்பொருண்மைக்கண் அது சென்றாங்குச் செல்வன உளவேற்
குற்றமில்லை என்றவாறு.
வரலாறு : வழக்குப்பெற்றவழிக் கண்டுகொள்க. (28)
108.
வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலங் கருவி யென்றா
வின்னதற் கிதுபய னாக வென்னு
மன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ
யாயெட் டென்ப தொழின்முத னிலையே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், வினைச்சொல் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
இவ் வெட்டொடுந் தோன்றநிற்கும் வினைச்சொல்
என்றவாறு.
வரலாறு :
வனைந்தான் என்ற சொல்லாலே அவ்வெட்டும் பெறும்
என்பது.
பெறுமாறு : வனைந்தான் என்ற வினை விளங்கிற்று ; அதனால்
வனைதற்றொழின்மை விளங்கும்.
செய்வது என்பது -- செய்தான் ஒருவன் என்பது விளங்கும்.
செயப்படு பொருள் என்பது -- குடந் தொடக்கத்தன என்பது
விளங்கும்.
நிலம் என்பது -- ஓரிடத்திருந்ததென்பது விளங்கும்.
காலம் என்பது -- இரவானும் பகலானும் என்பது விளங்கும்.
கருவி என்பது -- கோலும் திரிகையும் என இத் தொடக்கத்தன
விளங்கும்.
இன்னதற்கு என்பது -- ஒருவற்கு என்பது விளங்கும்.
இது பயன் என்பது -- அறமானும் பொருளானும் ஒரோவொன்று
பயக்கும் என்பது