தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1207


து விளங்கும். 

இஃது  அவ்  வெட்டிலக்கணமும்  தோன்ற  நிற்குமாறு  ;  பிறவும்
அன்ன. (29) 

109. அவைதாம்
வழக்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும். 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,  மேற்  சொல்லப்பட்ட
வினைத்திறம் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : மேற் சொல்லப்பட்ட எட்டும்  உடன்  விளங்காது  குறைய
நிற்பனவும் உள வழக்கினுள் வினைச்சொற்கள் என்றவாறு. 

வரலாறு     :  கொடியாடிற்று  என்புழிச்,  செயப்படுபொருளும்
இன்னார்க்கு  என்பதும் இன்னது பயக்கும் என்பதும் இல்லை. பிறவும்
அன்ன. (30) 

110. முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ்
சினையிற் கூறு முதலறி கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரு
மியன்றது மொழிதலு மிருபெய ரொட்டும்
வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ
யனைமர பினவே யாகுபெயர்க் கிளவி.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  ஆகுபெயர் உணர்த்துதல்
நுதலிற்று. 

உரை   : முதலிற்  கூறுஞ் சினையறி கிளவித் தொடக்கத்தன ஏழு
கூறிய  பின்னை   அனைமரபினவே  என்றார்,  அவ்  விலக்கணத்தன
அவை என்றவாறு. 

முதலிற்  கூறுஞ்   சினையறி  கிளவி   என்பது  --  முதலாற்
சினையைச் சொல்லுதல் என்றவாறு. 

அது, தெங்கு தின்றான் ; கடுத் தின்றான் எனவரும். 

சினையிற்  கூறும்  முதலறி  கிளவி  என்பது  --   சினையின்
பெயர்கூற முதல் விளங்குவது என்றவாறு. 

அது, இலைநட்டு வாழும் ; பூநட்டு வாழும் எனவரும். 

பிறந்தவழிக்  கூறல்  என்பது -- ஓரிடங்  கூற  அவ்விடத்தாயின
பொருண்மையி னிற்றல் என்றவாறு. 

அது, குழிப்பாடி என வரும். 

பண்புகொள் பெயர் என்பது -- ஒரு குணங்கூற அக்குணமடைந்த
பொருள் விளங்கிநி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:21:41(இந்திய நேரம்)