தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1208


ற்றல் ;

அது  வருமாறு : நீலம் என்பதோர் பண்பு ; அப் பண்புச் சொல்
அப்  பண்பினை  யடைந்த  ஆடையானும் பிறவாற்றானும் விளங்கும்
என்பது.

இயன்றது மொழிதல் என்பது -- இயன்றது என்பது செய்கை ; அச்
செய்கை  சொல்ல  அச்  செய்கை  நிகழ்ச்சியினாய  வேறுபாடும் அப்
பெயர்த்தாய்  விளங்கும். அது வருமாறு : ஏறு, குத்து  என, எறியவும்
குத்தவுமாயின அத் தொடக்கத்தன விளங்கி நிற்கும் என்பது.

இருபெய ரொட்டு என்பது -- இரண்டு  பெயர்  ஒட்டி  நிற்பது ;
அது சொல்லப் பிறிதுபொருள் விளங்கும். அது வருமாறு : பொற்றொடி
என்பது,  இருபெயர்  நின்று  ஒட்டிற்று  ; அது சொல்லப் பொற்றொடி
தொட்டாளை விளக்கும் என்பது.

வினைமுதலுரைக்குங்  கிளவி என்பது -- வினைசெய்தான் பெயர்
சொல்ல,  அவன்  செய்பொருளை  யறிய  நிற்றல்  என்றவாறு.  அது,
தொல்காப்பியம், கபிலம் என்பன.

ஆகுபெயர் என்ற பொருண்மை  யென்னையெனின், ஒன்றன் பெயர்
ஒன்றற்காய் நிற்றல் என்றவாறு. (31)

111.  அவைதாம்
தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலு
மொப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலு
மப்பண் பினவே நுவலுங் காலை. 

இச்      சூத்திரம்      என்னுதலிற்றோ     வெனின்,     இதுவும்
ஆகுபெயர்க்கண்ணே யாவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

உரை : அவ் வாகுபெயர்கள்  முதற்கண் ஆங்காலம், அம் முதற்கே
யன்றி  அம்  முதலொடு  தொடர்ந்த பொருண்மேல் நிற்றலும், முதற்கு
எவ்வியைபு  மில்லாதனமேல்  நிற்றலும் என இரண்டிலக்கணம் உடைய
என்றவாறு.

தத்தம் பொருண்மையிற் றம்மொடு சிவணல் -- தெங்கு கடு என்னுந்
தொடக்கத்தன : தெங்கு என்றவிடத்து
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:21:52(இந்திய நேரம்)