Primary tabs

தெங்கின்காய் எனல் கொள்க ; கடுவும் அன்னதே.
ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டல்-நீலம் என்றது நீலமுண்ட
ஆடையெனின், அவ்விடத்து நீலத்திற்கு எவ்வியைபுமின்றி நின்றது
ஆடை என்க. பிறவும் அன்ன.
இங்ஙனம் தத்தம் பொருட்கு இயைந்தவனவற்று
மேலனவும்,
இயையாதவற்று மேலனவும் என இருவகையவாய் நிற்கும் அவ்
வாகுபெயர்கள் என்றவாறு. (32)
112. வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் ஆகுபெயர்க்கண்ணே
கிடந்ததோர் பகுதி யுணர்த்துதல் நுதலிற்று.
ஆகுபெயர்க்கு ஆவதோர் வேறுபாடு தெரிந்துணர்க. ஆவதோர்
வேறுபாடு என்னெனின்,
தொல்காப்பியனாற் சொல்லப்பட்டது
தொல்காப்பியம்
என ஈறு திரிந்தது. அன்றியும், ‘வேற்றுமை மருங்கில்
போற்றல் வேண்டும்’
என்றல் அவ் வாகுபெய
ரெல்லாம்
வேற்றுமையொடு தொடர்ந்த மருங்கினைப் போற்றியறிக என்றவாறு.
யாதோ வெனின், தெங்கினதுகாய்
தெங்கு என ஆறாவது
தொடர்ந்தது. நீலத்தையுடைய ஆடை நீலம் என இரண்டாவது
தொடர்ந்தது.
பிறவும் இவ்வாறே தொடர்ந்தவாறு போற்றியறிக
என்றவாறு.
இனி, அல்லதூஉம் ஆகுபெயர்கள் தத்தம் பொருள்வயிற் றம்மொடு
சிவணின என்றும், ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டின என்றும்
போற்றி யுணர்க என்றவாறு. (33)
113. அளவு நிறையு மவற்றொடு கொள்வழி
யுளவென மொழிப வுணர்ந்திசி னோரே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், அளவும் நிறையும்
ஆகுபெயராவன உள என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
அளவும் நிறையும் ஆகுபெயர் ஆயினவளவு
மேற்கூறியபோல என்றவாறு.
வரலாறு :
நாழி, உழக்கு என அளக்கப்படும் பொருளையும் ;
தொடி, துலாம் என நிறுக்கப்படும்