Primary tabs

ாலை’ [ விளிம்பு-33 ] என்னும் மாட்டேறு செல்லாமையான்
னகரவீற்று ஒற்றுமைபற்றி வைத்துணர்த்தினார் என்பது. (19)
134. தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும்
யானென் பெயரும் வினாவின் பெயரு
மன்றி யனைத்தும் விளிகோ ளிலவே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், னகரவீற்றுள்
விளியேலாதன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரை : அவைதாம், தான் அவன் இவன் உவன் யான் யாவன்
என்பன இவ்வாறுபெயரும் மேல் எவ்விளியும் ஏலா என்றவாறு. (20)
135. ஆரு மருவு மீரொடு சிவணும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே
ரகரவீறு விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
ஆர் என்னும் ஈறும் அர் என்னும் ஈம் திரிந்து ஈர்
ஆகும் என்றவாறு.
வரலாறு : பார்ப்பார் - பார்ப்பீர், கூத்தர் - கூத்தீர் என வரும்.
(21)
136. தொழிற்பெய ராயி னேகாரம் வருதலும்
வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், எய்தியதன்மேற் சிறப்புவிதி
யுணர்த்துதல் நுதலிற்று.
உரை :
ரகரவீறு தொழிற்பெய ராமேயெனின் மேல் எய்திய ஈறே
யன்றி, அதனொடு ஏகாரம்பற்றி யேற்க என்றவாறு.
வரலாறு : உண்டார் - உண்டீரே,சான்றார் - சான்றீரே என வரும்.
‘வழுக்கின்று’ என்பதனால், நம்பியார் - நம்பியீரே, கணியார் -
கணியீரே என்பன போல்வன கொள்க. (22)
137. பண்புகொள் பெயரு மதனோ ரற்றே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் எய்தியதன்மேற்
சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று.
உரை :
பண்புகொள வந்த ஆர் ஈற்றோடு ஏகாரம் பெற்று
விளியேற்கும் என்றவாறு.
வரலாறு : செய்யார் - செய்யீரே என வரும். (23)
138. அளபெடைப் பெயரே யளபெடை யியல.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ரகவீற்று அளபெடைக்குரிய
இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
ரகரவீற்று அளபெடைப் பெயர் இகரவீற்று அளபெடைப்
பெயர்