தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1217


போல் விளி யேற்கும், இயல்பாய் என்றவாறு. 

வரலாறு : மகாஅர், சிறாஅர் என வரும். (24) 

139. சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,  எய்தியது  விலக்குதல்
நுதலிற்று. 

உரை : மேல் னகரவீற்றுச் சுட்டுப் பெயர் விளி யேலா என்றான் ;
அவையேபோல   ரகரவீற்றுச்   சுட்டுப்  பெயரும்  விளியேலா  என
மாட்டெறிந்தவாறு. 

அவையாவன : அவர், இவர், உவர் என்பன. (25) 

140. நும்மின் றிரிபெயர் வினாவின் பெயரென்
றம்முறை யிரண்டு மவற்றியல் பியலும்.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  மேல் எய்தியது விலக்கல்
நுதலிற்று. 

உரை : நும்மின் திரிபெயர் - நீயிர் என்பது, வினாவின் திரிபெயர்
- யாவர் என்பது, இவை யிரண்டு பெயரும் விளியேலா என்றவாறு. 

மற்று, இர் ஈறு விளியேற்கும் என்றதின்மையின், நும்மின் றிரிபெயர்
விளி  யேலாது  என்று  விலக்கியது  என்னை  யெனின்,  அற்றன்று ;
பெண்டிர்  -  பெண்டீரே  என, இர் ஈறும் விளியேற்கும் என்று மேல்
இலேசினான் எய்துவித்துப் போந்தாமாகலின் (சூ. 12) விலக்க வேண்டும்
என்பது. (26) 

141. எஞ்சிய விரண்டி னிறுதிப் பெயரே
நின்ற வீற்றய னீட்டம் வேண்டும்.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின், மேல் நிறுத்த முறையானே
ஒழிந்த இரண்டு புள்ளியீறும் விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை :  ஒழிந்து  நின்ற  புள்ளிகளை  யீறாகவுடைய,  தம் இறுதி
யெழுத்தின் அயலெழுத்து நீண்டு விளியேற்க என்றவாறு. 

வரலாறு : குரிசில் - குரிசீல் ; தோன்றல் - தோன்றால் ; மக்கள் -
மக்காள் என வரும். (27) 

142. அயனெடி தாயி னியற்கை யாகும். 

இச்   சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  எய்தாதது  எய்துவித்தல்
நுதலிற்று. 

உரை : அவ்விரண்டு ஈறும், ஈற்றெழுத்தின்  அயலெழுத்து  நீண்டு
நிற்பின், இயற்கையாய் விளி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:23:31(இந்திய நேரம்)