Primary tabs

கோஒள் என விளிநிலைக்கண்ணும் நின்றாங்கே நிற்கும் என்பது. (32)
147. கிளந்த விறுதி யஃறிணை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அஃறிணை விரவுப்
பெயர்க்குரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : கிளந்த
இறுதியாவன -- உயிரீறு நான்கும் புள்ளியீறு
நான்குமாயவற்றை யிறுதியாகவுடைய அஃறிணைக்கண் வரும்
விரவுப்பெயர், மேற்கூறிய நெறியான் விளியேற்கும் என்றவாறு.
வரலாறு :
சாத்தி - சாத்தீ, பூண்டு - பூண்டே, தந்தை - தந்தாய்
எனவும், சாத்தன் - சாத்தா, கூந்தல் - கூந்தால், மகள் - மகளே
எனவும் வரும்.
ஓகார ஈறும், ரகார ஈறுமாய் வருவன விரவுப் பெயர் உளவேற்
கண்டுகொள்க. பிறவும் அன்ன. (33)
148. புள்ளியு முயிரு மிறுதி யாகிய
வஃறிணை மருங்கி னெல்லாப் பெயரும்
விளிநிலை பெறூஉங் காலந் தோன்றிற்
றெளிநிலை யுடைய வேகாரம் வரலே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், புள்ளியீறும் உயிரீறுமாகிய
அஃறிணைப் பெயர்க்கு உரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : புள்ளியீறும் உயிரீறும் ஆகிய அஃறிணைப் பெயரெல்லாம்
விளிகொள்ளுங் காலந்தோன்றின் ஏகாரம் பெறுதலைத்
தெற்றெனவுடைய என்றவாறு.
வரலாறு :
மரம் - மரமே, அணில் - அணிலே, நரி - நரியே, புலி
- புலியே என வரும்.
‘தெளிநிலையுடைய’ என்று விதந்து ஓதினமையான், ஏகாரம் ஒழியச்
சிறுபான்மை இயல்பாய் விளியேற்பனவும் உள.
வரலாறு : ‘வருந்தினை வாழியென் நெஞ்சம்’ எனவும்,
‘கருங்கால் வெண்குருகு’ எனவும்,
‘நெடுவெண்மதி’ எனவும்,
‘காட்டுச் சாரோடுங் குறுமுயால்’ எனவும்,
‘ஒண்டூவி நாராய்’ எனவும் வரும். (34)
149. உளவெ