தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1220


    னப் பட்ட வெல்லாப் பெயரு
மளபிறந் தனவே விளிக்குங் காலைச்
சேய்மையி னிசைக்கும் வழக்கத் தான.
 

* இச் சூத்திரம்,  உயர்திணைக்கண்ணும்  அஃறிணைக்கண்ணும்  விளி
யேற்பனவாகச்  சொல்லப்பட்டன  எல்லாப் பெயரும் விளிக்குமிடத்துத்
தத்தம் மாத்திரையி னிறந்து இசைத்தனவாம், சேய்மைக்கண் ஒலிக்கும்
வழக்கத்தின்கண் என்றவாறு. 

வரலாறு    : நம்பீ, சாத்தா என வரும். 

‘அளபெடைமிகூஉம்’ (சூ. 8) என்றமையின்,  அளபெடைப்  பெயர்
ஒழித்துக் கொள்க. (35) 

150. அம்ம வென்னு மசைச்சொ னீட்ட
மம்முறைப் பெயரொடு சிவணா தாயினும்
விளியொடு கொள்ப தெளியு மோரே.
 

இச்   சூத்திரம்,   அம்ம   என்னும்  அசைச்  சொல்லினது  நீட்டம்
விளிகொள்ளும் பெயரொடு தோன்றாது, இடைச் 

*  இச்   சூத்திரமுதல்   மேல்வருஞ்   சூத்திரங்கள்   சிலவற்றிற்குக்
கருத்துரை    காணப்படவில்லை.    சொல்லொடு  தோன்றிற்றாயினும்
விளியாகக் கொள்வர் தெளிவோர் என்றவாறு. 

வரலாறு    : அம்மா சாத்தா என்பது. 

சாத் தா என்பதே எதிர்முகமாக்குமாயினும்,  அம்ம என்பதும் அவ்
வெதிர்முகமே  குறித்து  நிற்றலின் விளியாகக் கொள்ளப்படும் என்பார்,
‘விளியொடு கொள்ப’ என்றார். (36) 

151.  தநநு எயென வவைமுத லாகித்
தன்மை குறித்த னளரவென் னிறுதியு
மன்ன பிறவும் பெயர்நிலை வரினே
யின்மை வேண்டும் விளியொடு கொளலே.
 

இச்  சூத்திரம்,  த,  ந,  நு  என்னும்  உயிர்மெய்யையும், எ என்னும்
உயிரையும் முதலாகவுடையவாய் ஒருவனது கிளைமைப் பொருண்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:24:03(இந்திய நேரம்)