Primary tabs

லவை, உள்ளது இல்லது, உள்ளன, இல்லன என்னுந்
தொடக்கத்தக்கன. (16)
168.
தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெய
ரொருமையும் பன்மையும் வினையொடு வரினே.
உரை: கள்ளொடு சிவணாத அஃறிணை யியற்பெயர் ஒருமையும்
பன்மையும் விளங்குநிலையுடைய, அதற்கேற்ற வினையொடு
தொடர்ந்தவழி என்றவாறு.
ஆவந்தது - ஆவந்தன; குதிரை வந்தது - குதிரை வந்தன என,
ஏற்ற வினையாற் பால் விளங்கியவாறு கண்டுகொள்க. (17)
169.
இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமையிற்
றிரிபுவேறு படூஉ மெல்லாப் பெயரு
நினையுங் காலைத் தத்த மரபின்
வினையோ டல்லது பாறெரி பிலவே.
உரை: இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமையவாகலின்
உயர்திணைக்கட் சென்றுழி உயர்திணைப் பெயராயும், அஃறிணைக்கட்
சென்றுழி அஃறிணைப் பெயராயும் வேறுபடு பெயரெல்லாம்
ஆராயுங்கால் தத்தம் மரபின் வினையொடு இயைந்தல்லது
திணைவிளங்கி நில்லா என்றவாறு.
வரலாறு: சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது;
முடவன் வந்தான்,
முடவன் வந்தது எனக் கொள்க. (18)
170.
நிகழூஉ நின்ற பால்வரை கிளவியி
னுயர்திணை யொருமை தோன்றலு முரித்தே
யன்ன மரபின் வினைவயி னான.
உரை:
நிகழ்காலம் பற்றிவரும் பால்வரை கிளவியால் உயர்திணை
ஒருமைப்பால் தோன்றுதலும் உரித்து,
அவ் வொருமைப்பாற் றோன்றுதற்கேற்ற வினையிடத்து என்றவாறு.
‘பால்வரை கிளவி’ என்பது, செய்யும் என்னும் முற்றுச் சொல்லை.
சாத்தன் யாழ் எழூஉம், சாத்