Primary tabs

ரும் நான்கு பெயரும், அஃறிணைப் பெண் ஒன்றற்கும் உயர்திணை
ஒருத்திக்கும் உரிய என்றவாறு.
அந் நான்கும் ஆவன: பெண்மை யியற்பெயரும், பெண்மைச்
சினைப்பெயரும், பெண்மைச் சினைமுதற்பெயரும், பெண்மை
முறைப்பெயரும் என்பன.
வரலாறு: சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவும்; முடத்தி வந்தது,
முடத்தி வந்தாள் எனவும்; முடக்கொற்றி வந்தது, முடக்கொற்றி வந்தாள்
எனவும்; தாய் வந்தது, தாய் வந்தாள் எனவும்; அவ்வம் முறையானே
அஃறிணைப் பெண் ஒன்றற்கும், உயர்திணைப் பெயர் ஒருத்திக்கும்
வந்தவாறு கண்டு கொள்க. பிறவும் அன்ன.
178.
ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரு
மொன்றற்கு மொருவற்கு மொன்றிய நிலையே.
இதுவும் மேற் சூத்திரத்தோடு இயைபு.
வரலாறு: சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் எனவும்; முடவன்
வந்தது, முடவன் வந்தான் எனவும்; முடக்கொற்றன் வந்தது,
முடக்கொற்றன் வந்தான் எனவும்; தந்தை வந்தது, தந்தை வந்தான்
எனவும் அவை முறையானே அஃறிணை ஒன்றற்கும், உயர்திணை
ஆண்பாற்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. பிறவும் அன்ன. ()
179.
பன்மை சுட்டிய வெல்லாப் பெயரு
மொன்றே பலவே யொருவ ரென்னு
மென்றிப் பாற்கு மோரன் னவ்வே.
உரை: பன்மை சுட்டிய மூன்று பெயரும், அஃறிணை ஒருமையும்,
அத்திணைப் பன்மையும், உயர்திணை ஒருமையும் எனச்
சொல்லப்பட்ட மூன்று பாற்கும் உரிய என்றவாறு.
அவையாவன: பன்மையியற்பெயர், பன்மைச் சினைப்பெயர்,
பன்மைச் சினைமுதற் பெயர் என்பனவாம்.
வரலாறு: யானை வந்தது - யானை வந்தன, யானை வந்தான் -
யானை வந்தாள் எனவும்; நெடுங்கழுத்தல் வந்தது - நெடுங்கழுத்தல்
வந்தன, நெடு