தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1234


ங்கழுத்தல்     வந்தான்  -  நெடுங்கழுத்தல்  வந்தாள்  எனவும்;
பெருங்கால் யானை வந்தது - பெருங்கால் யானை வந்தன, பெருங்கால்
யானை  வந்தான்,  பெருங்கால் யானை வந்தாள் எனவும் முறையானே
அஃறிணை  ஒருமைக்கும்,  அகத்திணைப்  பன்மைக்கும், உயர்திணை
ஒருமைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. (28) 

180. ஒருமை சுட்டிய வெல்லாப் பெயரு
மொன்றற்கு மொருவர்க்கு மொன்றிய நிலையே. 

உரை:  ஒருமை சுட்டி   வரும்   மூன்று   பெயரும்   அஃறிணை
ஒருமைக்கும், உயர்திணை ஒருமைக்கும் உரிய என்றவாறு. 

அம் மூன்றுமாவன:   ஒருமையிற்பெயர்,  ஒருமைச்  சினைப்பெயர்,
ஒருமைச் சினைமுதற்பெயருமாம். 

வரலாறு:   கோதை வந்தது - கோதை வந்தான், கோதை வந்தாள்
எனவும்;  செவியிலி  வந்தது,  செவியிலி வந்தான், செவியிலி வந்தாள்
எனவும்;   கொடும்புறமருதி   வந்தது,   கொடும்புற  மருதி  வந்தான்,
கொடும்புற    மருதி   வந்தாள்   எனவும்;   முறையே   அஃறிணை
ஒருமைக்கும்,  உயர்திணை  ஒருமைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டு
கொள்க. (29) 

181. தாமென் கிளவி பன்மைக் குரித்தே.

இச்  சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,  ‘தத்தம் மரபின’ [தொல்.
பெயரியல்  -  21.] எனப்பட்ட பெயர் இருபாற்கும் உரியவாய் வருமாறு
உணர்த்துதல் நுதலிற்று. 

உரை: தாம்  என்னும்  பெயர் இரு திணைக்கும்  பன்மைப்பாற்கு
உரித்து என்றவாறு. 

தாம் வந்தார், தாம் வந்தன என வரும். (30) 

182. தானென் கிளவி யொருமைக் குரித்தே.

உரை:  தான் என்னும் பெயர் இருதிணைக்கண்ணும் ஒருமைப்பாற்கு
உரித்து என்றவாறு. 

வரலாறு: தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது எனவரும்.
                                                     (31)

183. எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே. 

உரை: எல்லாம் என்னும் பெயர் இரண்டு திணைக்கண்ணும் பன்மை
குறித்து வரு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:26:39(இந்திய நேரம்)