தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1235


ம் என்றவாறு. 

வழி என்பது இடம். 

வரலாறு: எல்லாம் வந்தேம், எல்லாம் வந்தீர்,  எல்லாம்  வந்தார்,
எல்லாம் வந்தன எனவரும். (32) 

184. தன்னு ளுறுத்த பன்மைக் கல்ல
துயர்திணை மருங்கி னாக்க மில்லை. 

உரை : எல்லாம்   என்னும்   சொல்  உயர்திணைக்கு  ஆங்கால்
தன்மைப்பன்மைக்கல்லது   முன்னிலைப்   பன்மைக்கும்  படர்க்கைப்
பன்மைக்கும் ஆகாது என்றவாறு

‘ஆக்கமில்லை’ எனவே சிறுபான்மை வரப்பெறும். () 

185. நீயிர் நீயென வரூஉங் கிளவி
பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள. 

உரை:  நீயிர் நீ என்னும்  இரண்டு பெயர்ச்சொல்லும் திணைப்பகுதி
தெரிய நில்லா; இருதிணையும் உடன்றோன்றும் பொருள என்றவாறு.

நீயிர்   வந்தீர், நீ  வந்தாய்  என  இரு  திணைக்கும்  பொதுவாய்
நின்றவாறு கண்டுகொள்க. (34) 

186. அவற்றுள்
நீயென் கிளவி யொருமைக் குரித்தே. 

உரை : மேற் சொல்லப்பட்ட  இரண்டு பெயருள் நீ என்னும் பெயர்
ஒருமைக்கு உரித்து என்றவாறு. 

ஒருமையாவது : ஒருவன்,  ஒருத்தி,  ஒன்று என்பனவற்றிற்கெல்லாம்
பொதுவாகிய ஒருமை. 

நீ வந்தாய் எனக் கண்டுகொள்க. (35) 

187. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே

உரை : நீயிர் என்னும் பெயர் பன்மைக்கு உரித்து என்றவாறு. 

பன்மை யாவது :பல்லோர்க்கும்   பலவற்றிற்கும்  பொதுவாகிய
பன்மை. 

நீயிர் வந்தீர் எனக் கண்டுகொள்க. (36) 

188. ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி
யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை. 

உரை : ஒருவர்  என்னும்  பெயர்ச்சொல்   உயர்திணைப்  பாலுள்ஒருபால் விளக்கா ; ஒருவன், ஒருத்தி என்னும் இருபாற்கும் பொதுவாய்
நிற்கும் என்றவாறு. 

வரலாறு : ஒருவர் வந்தார் என்பது, பொதுவாய் நின்றவாறு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:26:50(இந்திய நேரம்)