தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1239


ஆறாவது

வினையியல் 

195. வினையெனப் படுவது வேற்றமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும். 

என்பது சூத்திரம். 

என்     நுதலிற்றோவெனின், நிறுத்த முறையானே வினைச்சொல்
ஆமாறு  உணர்த்திய  எடுத்துக்  கொண்டார்,  அதனால் இவ் வோத்து
வினையியல் என்னும் பெயர்த்தாயிற்று. 

உரை :    வினையென்று    சொல்லப்படுவது    வேற்றுமையொடு
பொருந்தாது, ஆராயிற் காலத்தொடு புலப்படும் என்றவாறு. 

ஈண்டு வேற்றுமை என்பது உருபை. 

வரலாறு : உண்டான்,   கரியன்   என   வேற்றுமை  கொள்ளாது
காலமொடு தோன்றியவாறு கண்டுகொள்க. 

196. காலந் தாமே மூன்றென மொழிப.

உரை  : மேல் தோற்றுவாய் செய்யப்பட்ட  காலம்  மூன்று  என்று
சொல்லுவர் புலவர் என்றவாறு. (2) 

197. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா
வம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே. 

உரை : இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்று சொல்லப்படும் மூன்று
காலமும்   குறிப்புவினையொடும்   பொருந்தும்   மெய்ந்நிலையுடைய,
வினைச்சொல்லானவை தோன்றுநெறிக்கண் என்றவாறு. 

எனவே,   காலம் மூன்றாவன இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பதூஉம்,
வெளிப்படக்   காலம்   விளங்காதன   குறிப்பு   வினையென்பதூஉம்
பெற்றாம். 

வரலாறு : உண்டான், உண்ணாநின்றான், உண்பான் என வரும். 

இறப்பாவது,     தொழிலது    கழிவு  ;  நிகழ்வாவது,    தொழில்
தொடங்கப்பட்டு  முற்றுப்  பெறாத  நிலைமை  ; எதிர்வாவது தொழில்
பிறவாமை. (3) 

198. குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் லெல்லா
முயர்திணைக் குரிமையுமஃறி
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:27:35(இந்திய நேரம்)