Primary tabs

ணாநின்றேன், உண்குவேன் எனவும் வரும்.
அல் -- உண்பல், தின்பல் என எதிர்காலம் பற்றி வரும்.
இப்பொழுது அதனை உண்பன், தின்பன் என அன் ஈறாக வழங்குப
என்ப. (6)
201.
அவற்றுட்
செய்கென் கிளவி வினையொடு முடியினு
மவ்விய றிரியா தென்மனார் புலவர்.
உரை : அவ் வேழனுட் செய்கு என்னும் சொல் வினைகொண்டு
முடியினும் அமையும் என்றவாறு.
வரலாறு : உண்கு வந்தேன் எனவரும்.
செய்கென் கிளவி வினையொடு முடியினும் அமைக எனவே
செய்கும் என்னும் கிளவியும் வினையொடு முடியினும் அமைக என்பது
போந்ததாம்.
வரலாறு : உண்கும் வந்தேம் என வரும்.
இனி அவை முடியினும் அமையும் எனவே, பெயர் கொண்டு
முடிதலே வலியுடைத்து என்பதே போந்ததாம்.
அவை : உண்கு யான், உண்கும் யாம் என வரும்.
‘அவ்வியல்திரியா’ என்பது அவையும் முற்றுச்சொல் இயல்பிற்
றிரியா என்றவாறு. (7)
202.
அன்னா னள்ளா ளென்னு நான்கு
மொருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், உயர்திணைத்
தன்மைச்சொல் உணர்த்தி, அத்திணைப் படர்க்கைவினைச் சொல்
உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
அன் என்பதனைத் தொடக்கமாக வுடைய நான்கு ஈற்றுச்
சொல்லும் உயர்திணைக்கண் ஒருமைப் பாலை உணர்த்தும் படர்க்கை
வினைச்சொல் என்றவாறு.
அவை வருமாறு :
ஆன் -- உண்டனன், உண்ணாநின்றனன், உண்குவன் என வரும்.
ஆன் -- உண்டான், உண்ணாநின்றான், உண்பான் என வரும்.
அள் -- உண்டனள், உண்ணாநின்றனள், உண்குவள் என வரும்.
ஆள் -- உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள் என வரும். (8)
203.
அர் ஆர் பஎன வரூஉ மூன்றும்
பல்லோர்