தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1243


 மருங்கிற் படர்க்கைச் சொல்லே.

இச் சூத்திரம் எ.ன்  நுதலிற்றோ வெனின், உயர்திணைப் படர்க்கைப்
பன்மை வினைச்சொல் இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : அம் மூவகைச்  சொல்லும் பலராய புறத்தாரை யுணர்த்துஞ்
சொல் என்றவாறு. 

வரலாறு : 

அர் -- உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர் என வரும். 

ஆர் -- உண்டார், உண்ணாநின்றார், உண்பார் என வரும். 

ப -- உண்ப, தின்ப என எதிர்காலங்கொண்டு வரும். 

204. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியு மென்ப. 

உரை  :  மார்   என்பதூஉம்   உயர்திணைப்   படர்க்கைப்
பன்மைவினைக்கு   உரித்து   ;   அது   பின்னை  முடியுங்  காலை
வினைச்சொல்லொடு முடிதல் உடைத்து என்றவாறு. 

வரலாறு : ஆர்த்தார் கொண்மார் வந்தார் எனவரும். 

இது முற்றுச்சொல்    லாகலான்    வினைச்சொல்லொடு   முடிதல்
வேற்றுமைகண்டு அஃதுணர்த்தியவா றென்பது. 

205. பன்மையு மொருமையும் பாலறி வந்த
வந்நா லைந்து மூன்றுதலை யிட்ட
முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே. 

இச்  சூத்திரம்     என்     நுதலிற்றோ     வெனின்,     மேல்
விரித்தவற்றையெல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : பன்மைப்பாலும்  ஒருமைப்பாலும் தோன்ற நின்ற இருபத்து
மூன்றுமே உயர்திணை மூன்றுபாற்கும் உரிய என வரையறுத்தவாறு. 

அது, ‘விரித்துத்    தொகுத்தல்’    என்னும்    நூற்புணர்ப்புப்பட
வைத்தவாறு. (11) 

206. அவற்றுட்
பன்மை யுரைக்குத் தன்மைக் கிளவி
யெண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே.

இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், அத்தொகுக்கப்பட்டனவற்றுள்
ஒருசாரவற்றது வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : பன்மைத்   தன்மைச்  சொற்கள்  ஆராயுமிடத்து  அவை
திரிபுடைய என்றவாறு. 

யாதோ திரிபு எனின்,  அம்  ஆம்  என்னும் இரண்டும் தன்னொடு
முன்னின்றானை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:28:18(இந்திய நேரம்)