Primary tabs

சொல் உணர்த்துதல் நுதலிற்று.
அ -- உண்டன, உண்ணாநின்றன, உண்பன என வரும்.
ஆ -- உண்ணா, தின்னா என வரும்.
வ -- உண்குவ, தின்குவ என வரும்.
வரூஉம் இறுதி அப்பான் மூன்று என்பது -- இறுதி இயைபுடைய
அப்பான் மூன்று என்றவாறு.
இவை மூன்றுமே அஃறிணைப் பன்மைப்படர்க்கை வினைச்சொற்கு
ஈறாம் எழுத்துக்கள் என்றவாறு. (18)
213.
ஒன்றன் படர்க்கை தடற வூர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்.
இச்சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், அஃறிணை ஒருமைப்பாற்கு
உரிய வினைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : ஒன்றனை யறியும் படர்க்கை வினைச்சொல்லாவன த - ட
-றக்களை ஊர்ந்த குன்றியலுகர ஈற்றுச் சொல் என்றவாறு.
வரலாறு : உண்டது, உண்ணாநின்றது, உண்பது எனவும் ;
கூயிற்று, தாயிற்று எனவும் ;
குண்டுகட்டு, குறுந்தாட்டு எனவும் வரும்.
இனிக், கிளவியாக்கத்துப் பாலுணர்த்தும் எழுத்துக்களைப் படர்க்கை
வினைச்சொல் ஈற்றவாகக் காட்டியது இவ்வோத்தினுட் கூறப்பட்ட
இலக்கணம் வலித்தாயிற்று என்பது. (19)
214.
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
வம்மூ விரண்டு மஃறிணை யவ்வே.
இச்சூத்திரம் என்நுதலிற்றோவெனின், விரிந்தது தொகுத்தவாறு
நுதலிற்று.
உரை :
பன்மைப்பாலும் ஒருமைப்பாலும் அறிய வந்த ஈற்றுச்
சொற்களும் அஃறிணைக்கு உரிய வினைச்சொல் என்றவாறு. (20)
215.
அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கு
மொக்கு மென்ப வெவனென் வினாவே.
உரை : அஃறிணை இருபாற்கும் பொதுவேயாகி நிற்கும், எவன்
என்னும் வினாவினை யுணரநின்ற வினைக் குறிப்புச்சொல் என்றவாறு.
வரலாறு :
எவன் அது, எவன் அவை என வரும், பெயருமாம்
படுத்துச் சொல்லின். (21)
216.
இன்றில வுடைய