தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1248


வென்னுங் கிளவியு
மன்றுடைத் தல்ல வென்னுங் கிளவியும்
பண்புகொள் கிளவியு முளவென் கிளவியும்
பண்பி னாகிய சினைமுதற் கிளவியு
மொப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ
யப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும்
பன்மையு மொருமையும் பாலறி வந்த
வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங்
காலக் கிளவி யஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.

இச் சூத்திரம்  என்  நுதலிற்றோவெனின், அஃறிணைவினைக் குறிப்பு
உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : சொல்லப்பட்ட பத்துப்  பொருண்மைக்கண்ணும் அஃறிணை
வினைக்குறிப்புப் பிறக்கும் என்றவாறு. 

இன்று என்பது -- கோடின்று, செவியின்று என வரும். 

இல என்பது -- கோடில, செவியில என வரும். 

உடைய என்பது -- கோடுடைய, செவியுடைய என வரும். 

அன்று என்பது -- நாயன்று, நரியன்று என வரும். 

உடைத்து என்பது -- கோடுடைத்து, செவியுடைத்து என வரும். 

அல்ல என்பது -- உழுந்தல்ல, பயறல்ல என வரும். 

பண்புகொள் கிளவி -- கரியது, கரிய என வரும். 

உளவென் கிளவி -- உழுந்துள, பயறுள என வரும். 

பண்பினாகிய   சினைமுதற்      கிளவி   --    குறுங்கோட்டது,
குறுங்கோட்டன என வரும். 

ஒப்பொடு  வரூஉங்  கிளவி  --  பொன்னன்னது, பொன்னன்னன
 என வரும். 

இக்   கூறப்பட்ட  பத்துப்  பொருண்மைக்கண்ணும்  வினைக்குறிப்புச்
சொற்கள் கொள்ளப்படும் என்றவாறு. 

பன்மைப்பாலும்  ஒருமைப்பாலும் தோன்றிநிற்கும் இலக்கணமுடைய
வினைக்குறிப்புச் சொற்கள் மேற்கூறப்பட்ட அஃறிணை வினைச்சொற்கு
ஈறாய்நின்று  பாலுணர்த்தும்  எழுத்துக்களின்  உள்ளனவே  தமக்கும்
ஈறாவன, பிறிதில என்றவாறு. (22) 

217. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி
யின்மை செப்பல் வே
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:29:13(இந்திய நேரம்)