Primary tabs

றென் கிளவி
செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னு
மம்முறை நின்ற வாயெண் கிளவியும்
பிரிவுவேறு படூஉஞ் செய்திய வாகி
யிருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமைய.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், இருதிணைக்கும் உரிய
வினைச் சொற்களைப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல்
நுதலிற்று.
உரை :
முன்னிலை என்பது -- முன்னின்றான்
தொழின்மை
கூறுவது; வியங்கோள் என்பது -- ஏவநிற்பது ; வினையெஞ்சு கிளவி
என்பது -- வினைச்சொல்லை ஒழிபாகி நிற்பது ; இன்மை செப்பல்
என்பது -- இல்லை யென்பது ; ஒழிந்தன அவ்வாய்பாடே.
அவற்றுள், செய்ம்மன என்பது இப்பொழுது வழக்கரிது.
பிரிவு வேறுபடூஉஞ் செய்தியவாய் என்பது -- உயர்திணைக்கண்
வரின் உயர்திணைக்கே உரிய என்றும், அஃறிணைக்கண் வரின்
அஃறிணைக்கே உரிய என்றும் பிரித்துச் செய்யப்படும் என்றவாறு. (23)
218.
அவற்றுள்
முன்னிலைக் கிளவி
இஐ யாயென வரூஉ மூன்று
மொப்பத் தோன்று மொருவர்க்கு மொன்றற்கும்.
இச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், முன்னிலை யொருமைச்
சொற்கள் திணைக்கு உரியவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
முன்னிலைக் கிளவிகளில் இ, ஐ, ஆய் என்னும் மூன்று
திறத்தனவும் இரண்டுதிணை யொருமைப்பான் மூன்றற்கும் ஒப்ப
வுரியவாம் என்றவாறு.
உயர்திணை ஆண்பாற்கும் பெண்பாற்கும், அஃறிணை
யொருமைப்பாற்கும் என்பது.
வரலாறு : உண்டி, தின்றி என இறந்த காலத்திற்கே
பொருத்தமுடைத்தாய் இகரம் வரும்.
இனி, ஐ வருமாறு -- உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை
என மூன்று காலமும் வரும்.
ஆய் -- உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய் என மூன்று
காலமும் வரும்.
இனி, ஒரு காலத்திற்கே யேற்கும் இகரம் முற்கூறினமையின் உண்,
தின்,