Primary tabs

ம், அவர் உண்ணும் இல்லம் என வரும். ஒழிந்த பொருள்
முதலாயின ஐந்தையும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. (36)
231.
பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்
எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், எய்தியதன்மேல் சிறப்புவிதி
உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
பெயரெச்சம் வினையெச்சம் என்று கூறப்பட்ட
இருதிறத்தவும் எதிர்மறுத்துச் சொல்லினும் தம் பொருணிலைமையிற்
றிரியா என்றவாறு.
வரலாறு : உண்ணுஞ் சாத்தன் என்பது ; உண்ணாச் சாத்தன்
என்பதற்கும் அதுவே ; பிறிதில்லை.
இனி வினையெச்சம் : உண்டு வந்தான் என்பது, உண்ணாது
வந்தான் என வரும். பிறவும் இவ்வாறே எதிர் மறுப்ப என்பது ஒட்டிக்
கொள்க.
மற்று, முற்றுச் சொல், உண்ப சாத்தான் என்புழி, உண்ணான்
சாத்தான் என எதிர்மறுப்பினும், முற்றுச் சொல் லியல்பிற்றிரியா
தாகலின், அதற்குக் கூறுக எனின், அற்றன்று, முற்றுச் சொற்களை
யெல்லாம் ஈறுபற்றி ஓதினாராகலின் எதிர்மறையும் ஆண்டே யடங்கும்.
பெயரெச்ச வினையெச்சங்களையாயின் செய்து செய்யூ எனவும்,
செய்யும் செய்த எனவும் அவைதம்மை யெடுத்தோதினார். அவற்று
மறை பிறவாகொல்லோ என்று கருதினுங் கருதற்க என்றற்குக்
கூறப்பட்டது என்பது. (37)
232.
தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பி
னெச்சொல் லாயினு மிடைநிலை வரையார்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இன்னும் அவ் வெச்சங்கட்கு
முடிபு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
இவ்விருவகை யெச்சத்திடையும் பிறசொற்களும்
புகுதப்பெறும், அவ்வெச்சத்திற்கு வழிப்பொருத்தமுடையனதாம்
எச்சமல்லாதன என்பது.
வரலாறு :
‘உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே’ என்புழி,
இன்றி என்னும் வினையெச்சத்திற்கு முடிபு உண்க என்னும்
வியங்கோட்சொல் ; இனிப், புற்கை யென்பது இடைநிலை. இனிப்,
பெயரெச்சத்திற்கு உதாரணம் : அடுஞ் செந்நெற் சோறு, அட்ட செந்நெ