தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1257


ற் சோறு என்புழி, செந்நெல் என்பது இடைநிலை. பிறவும் அன்ன. 

‘சிவணுங் குறிப்பின் எச்சொல் லாயினும் இடைநிலை வரையார்’ என,
சிவணாக் குறிப்பின வரையப்படும் என்பதாம். (38) 

233. அவற்றுட்
செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகர
மவ்விட னறித லென்மனார் புலவர். 

இச்     சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அவ்வெச்சங்களுள்
செய்யும்    என்னும்   பெயரெச்சத்திற்குப்   படுவதோர்   வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று. 

உரை : செய்யும் என்னும்  பெயரெச்சத்திற்கு  ஈற்று  மிசை உகரம்
மெய்யொடுங் கெடுமிடம் அறிக வழக்கினகத்து என்றவாறு. 

வரலாறு : ‘வாவும் புரவி’ என்பது, ‘வாம் புரவி’ என்றாயிற்று. 

‘அவ்விடனறிதல்’  என்றதனான், ‘அம்பலூரு மவனொடு மொழிமே’
என்புழி,  மொழியும்  என்பது  மொழிம் என்றாயிற்று. மொய்யொழிந்து
கெடுதலும்  உடைத்து : அது, ‘சார னாடவென் றோழியுங் கலுழ்மே’ --
என்புழிக், கலுழும் என்பது கலுழ்ம் என்றாயிற்று. பிறவும் அன்ன. (39) 

234. செய்தெ னெச்சத் திறந்த கால
மெய்திட னுடைத்தே வாராக் காலம். 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ   வெனின்,   காலவழுக்   காத்தல்
நுதலிற்று. 

உரை : இறந்த  காலத்துச் செய்தெனெச்சம்  ஒழிந்த  நிகழ்காலமும்
எதிர்காலமும் கொள்வழியுடைத்து என்றவாறு. 

வரலாறு  : செய்தெனெச்சம் நிகழ்காலத்திற்கு ஏற்றது, கொடியாடித்
தோன்றும்    என்பது    ;    என்னை?   தோற்றமும்   ஆட்டமும்
உடனிகழுமாகலின் என்பது. 

இனி, உழுதுவருஞ்   சாத்தன்,   உண்டுவருஞ்  சாத்தன்  என்புழிச்
செய்தெனெச்சம் எதிர்காலத்திற்கு ஏற்றது. பிறவும் அன்ன. (40) 

235. முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை
யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து
மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்த
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:30:53(இந்திய நேரம்)