Primary tabs

ல் வேண்டும்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ
வெனின், ஒருசார்
வினைச்சொற்களெல்லாம் பொதுவாயதோர் காலமுடிபு உணர்த்துதல்
நுதலிற்று.
உரை :
மூன்று காலமும் புலப்படச் சொல்லாப் பாட்டியல்பினவாகிய
எவ்வகைப் பொருள்களையும் நிகழுங் காலத்துப் பயின்று மூன்று
காலத்திற்கும் பொதுவாகிய செய்யும் என்னுஞ் சொல்லாற் சொல்லுக
என்றவாறு.
வரலாறு : மலைநிற்கும், யாறொழுகும் எனவரும். (41)
236.
வாராக் காலத்து நிகழுங் காலத்து
மோராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள வென்மனார் புலவர்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் வினைச் சொற்குப்
பொதுவாயதோர் முடிபுணர்த்துதல் நுதலிற்று.
உரை : எதிர் காலத்துப் பொருளையும் நிகழ்காலத்துப்
பொருளையும் இறந்த காலத்துப் பொருளவாகச் சொல்லுக, விரைவு
நிலைமைக்கண் என்றவாறு.
வரலாறு :
சோறு வேவவிருந்து பாணியாநின்றுழிப்
புறத்தானொருவன் போகவேண்டுங் குறைப்பொருட்டாக, ‘இன்னும்
உண்டிலையோ? போதாயோ?’ என்றக்கால், ‘உண்டேன், போந்தேன்’
என்னும் உண்ணாதிருந்தானே யெனினும் ; ‘உண்டேன், போந்தேன்’
என்னும் உண்ணாநின்றானே யெனினும். பிறவும் அன்ன. (42)
237.
மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி
யப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வ தில்வழி நிகழுங் காலத்து
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் கால வழூஉக்காத்தல்
நுதலிற்று.
உரை :
மிக்கதன் மருங்கின் என்பது--உலகத்தாராற் சிறந்ததென்று
மதிக்க